72 பாடல்களைக் கொண்ட ஒரே படம் இதுதான்… இன்றுவரை யாராலுமே இந்த ரெக்கார்ட்டை உடைக்கமுடியவில்லை!

Movie
Movie
Published on

72 பாடல்களைக் கொண்ட இந்த படம்தான் இதுவரை அதிக பாடல்கள் கொண்ட படமாக இருந்து வருகிறது. அது என்ன படம் தெரியுமா?

பாடல்கள் இல்லாத இந்திய படங்களைப் பார்ப்பது மிகவும் அரிது. இன்றைய படங்களில் மிகவும் எளிதாக இந்திய படங்களின் பாடல்களை கணித்துவிடலாம். அதாவது தொடக்கத்தில் ஒரு பாடல், நடுவில் ஒரு பாடல், படம் முடிகையில் ஒரு பாடல் என்று ஆங்காங்கே பாடகள் வைப்பது இந்திய இயக்குநர்களின் வழக்கம். தேவையே இல்லாமல் பாடல்கள் வைக்கிறார்கள் என்று ரசிகர்கள் சொல்வதும் உண்டு. ஆனால், தேவையான இடத்தில் மட்டும் பாடல்களை வைத்து, ஒரு படத்தில் அதிக பாடல்களை வைத்த ஒரு இயக்குநரின் படத்தைதான் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.

1932ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் இந்திரசபா. இந்த படத்தை ஜே.ஜே.மதன் என்பவர் இயக்கினார். இந்த படம் வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் இந்தியாவுடைய முதல் Sound படமான ஆலம் ஆரா படம் வெளியானது. அடுத்த ஒரே வருடத்தில்தான் இப்படியொரு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. 19ம் நூற்றாண்டின் உருது மேடை நாடகமான இந்தெர்சபா என்பதிலிருந்து இது படமாக எடுக்கப்பட்டது. இப்படம் தமிழிலும் அதே பெயருடன் வெளிவந்தது.

ஒரு படமென்றால் சாதாரணமாக 5 முதல் 10 பாடல்கள் வரைக்கூட இருக்கலாம். ஆனால், இந்த இந்திரசபா படத்தில்தான் சிறு முதல் பெரிய கதாபாத்திரங்கள் வரை அனைவரையுமே ஒரு பாடல்போட்டுதான் அறிமுகப்படுத்தினார்கள். இசையில் ஏராளமான வகைகள் உள்ளன. அதிலிருந்து இந்த படத்தில், 9 தும்ரி இசைப்பாடல், 31 கஜால்ஸ், 13 சாதாரண பாடல்கள், 4 ஹோலி பாடல்கள், 5 ச்சந்த் பாடல்கள், 5 ச்சோபோலா  மற்றும் 5 மற்ற இசை பாடல்கள் என மொத்தம் 72 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
'சுவாதி முத்தின மலே ஹனியே' - கண்ணீர்க் கவிதை - தவிர்க்கக் கூடாத ஒரு படம்!
Movie

கலைக்கும் இசைக்கும் பெயர்போன இந்தியாவில் வெறும் மூன்றரை மணி நேரத்தில் ஒரு மனிதர் இசையை வைத்து விளையாடியிருக்கிறார். இன்றுவரை இந்த உலக சாதனையை யாராலுமே முறியடிக்க முடியவில்லை என்பதே ஒரு இந்திய இயக்குநருக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம். ஆஸ்காரெல்லாம் ஆங்கீகாரமா என்ன? கலைஞன் மறைந்தப்பின்னரும் அவன் கலை மறையாமல் இருப்பதுதான் அங்கீகாரமே. வரலாறு பேசும் படம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com