"தாத்தா வராரே... கதற விட போறாரே..." இந்தியன் 2 பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு..!

Indian 2
Indian 2

ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் தாத்தா வராரு லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
கல்கி 2898 AD படத்தின் மாஸ் அப்டேட்டை சொன்ன படக்குழு... ரசிகர்கள் உற்சாகம்..!
Indian 2

இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான "பாரா" என்கின்ற சிங்கிள் பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வரும் நிலையில், தாத்தா வராரு பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலின் முழு பாடல் வெளியாகாத நிலையிலேயே இன்ஸ்டாகிராமில் இந்த ஆடியோ ட்ரெண்டானது.

தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில், சித்தார்த்தும், பிரியா பவானி சங்கரும் சேர்ந்து ஆட்டம் போடுகின்றன. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முதல் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இந்த பாரா பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையை அனிருத் கொடுத்துள்ளார் என்றே கூறலாம். தனது பாடல்களில் ஒன்றை வைப் செய்வது போல் வைக்கும் அனிருத் இந்த பாடலை அதே போன்று அமைத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com