
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சமீபகாலமான ஓடிடி தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் படங்களை பார்க்கவே இன்றைய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதனாலேயே பல திரைப்படங்கள் தியேட்டரிகளில் வெளியாகாமல் நேராக ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகின்றன. அந்த அளவிற்கு ஓடிடி தளங்கள் மக்களின் வாழ்வில் ஒன்றாக பிணைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆரம்பகாலத்தில் ஓடிடியில் நடிக்க பெரிய நடிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் தற்போது ஓடிடி தளங்களின் அசூர வளர்ச்சியை பார்த்து பல முன்னனி நடிகர்கள் இதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தில் நடிக்கும் போது கிடைக்கும் வருமானத்தை விட ஓடிடியில் நடிக்கும் போது பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதும் முன்னனி நடிகர்கள் ஓடிடியில் நடிக்க ஆர்வம் காட்டுவதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் முன்னனி நடிகர், நடிகைகள் பலர் படங்களில் நடிப்பதை விட ஒரு வெப் சீரிஸில் நடித்தே, கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.
அப்படி இந்தியாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் ஓடிடி ஸ்டாராக உருவெடுத்து, ஒரே ஒரு வெப் சீரிஸில் இருந்து மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதித்த இந்த நடிகர், இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் போன்ற பிரபல நடிகர்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அது வேறு யாரும் இல்லீங்க.. நம்ம பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான். அதன்படி, 2021ல் 'ருத்ரா: எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்' என்ற தொடரில் காவலராக நடித்த அஜய் தேவ்கன், ரூ.126 கோடி சம்பளம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் டான் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஒரு படத்திற்கு ரூ.90-100 கோடி சம்பளமாக வாங்கும் போது நடிகர் அஜய் தேவ்கன் ஒரு வெப் சீரிஸில் நடித்ததற்கு ரூ.126 கோடி சம்பளம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
மொத்தம் ஏழு எபிசோடுகள் உள்ள ‘எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்’ என்ற வெப் சீரிஸில் ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் என்ற கணக்கில் ஏழு எபிசோடுகளுக்கு மொத்தமாக ரூ.126 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார் நடிகர் அஜய் தேவ்கன். அதுமட்டுமின்றி இந்தியாவில் வேறு எந்த நடிகரும் ஒரு வெப் சீரிஸுக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.