படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர் திடீர் மரணம்... யார் இவர் தெரியுமா?

Surya Kiran
Surya Kiran

நடிகரும் இயக்குனருமான சூரிய கிரண் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். மருத்துவ டெக்னாலஜி வளர்ந்து வரும் நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இவர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இவர் வளர்ந்த பிறகு உள்ள புகைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பதால், இவர் யாரென்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு காலத்தில் அனைவரின் பேவரைட்டான குட்டி நடிகர் என்ற பெயரை பெற்றதும் இவர் தான். படிக்காதவன் படத்தில் தான் இவர் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம். ரஜினியை ஸ்டைலை சிறுவயது கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து பெயர் எடுத்திருப்பார். ரஜினியை போன்றே முடியை சிலிப்பி, அவரது ஸ்டைலை ஃபாலோ செய்திருப்பார்.

Surya Kiran
Surya Kiran

இதை தாண்டி கல்லுக்குள் ஈரம், மௌன கீதங்கள் உள்ளிட்ட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார். இவர் குடும்பமே குழந்தை நட்சத்திரத்திற்கு பெயர் போனவர்கள் தான் போலும். இவரின் சகோதரியான சுஜிதாவும் சிறுவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர் தான் முந்தானை முடிச்சி, மந்திர புன்னகை உள்ளிட்ட படங்களில் சத்யராஜ், பாக்யராஜிற்கு மகன், மகளாக நடித்து அசத்தியிருப்பார்.

Surya Kiran
Surya Kiran
இதையும் படியுங்கள்:
சென்ற ஆண்டு அதிகம் பேசப்பட்ட 8 இந்திய படங்களில் 2 விஜய் படங்கள்!
Surya Kiran

இப்படி குடும்பமாகவே இவர்கள் சிறுவயதில் இருந்தே நடிப்பு கலையில் அசத்தியவர்கள் ஆவார்கள். வளர்ந்து வந்த இவர் இயக்குனர் அவதாரத்தை கையிலெடுத்து, சத்யம், தனா 51, பிரம்மஸ்திரம், ராஜூபாய், அரசி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு சமுத்திரம் படத்தில் தங்கையாக நடித்து புகழ்பெற்ற கல்யாணியை திருமணம் செய்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

சென்னையில் வசித்து வந்த இவர், திடீரென மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயில் தாக்கம் அதிகமானதால் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு பலருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com