Inga naan thaan kingu movie review
Inga naan thaan kingu movie review

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு - (நல்ல) சிரிப்புக்கு பஞ்சமில்ல!

ரேட்டிங்(3 / 5)

தமிழ் சினிமாவில் காமெடின்ற பேர்ல சில நடிகர்கள் பண்ற இம்சை தாங்க முடியல. இவங்கள நம்பி தியேட்டர்குள்ள போனா ஜோக்ன்ற பேர்ல மொக்கையா ஏதாவது பண்ணி வைச்சுடுறாங்க. மோதும்டா சாமி நீங்களும், உங்க காமெடியும் என நினைச்சு வீட்டுலயே யூ டியூப், ரீல் காமெடிகளை பார்க்கலாம்னு உட்கார்ந்து பார்த்துகிட்டு இருந்தப்ப சந்தானம் நடிச்ச நான் தான் கிங்கு படம் செம மாஸ் காமெடியா இருக்குன்னு தகவல் வந்துச்சு. டிடி ரிட்டன்ஸ், வடக்கு பட்டி ராமசாமி படங்களில் சந்தானம் நம்மள சிரிக்க வைச்சதால கொஞ்சம் நம்பிக்கையோட படம் பார்க்க போனோம்.

இன்னைக்கு 28 வயசுக்கு மேல இருக்கற பசங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியுமா? வேறென்ன? கல்யாணம் பண்ண பொண்ணு கிடைகலைன்ற பிரச்சனைதான். பையனுக்கு சமைக்க தெரியனும், கை நிறைய இல்லை, மூட்டை நிறைய நிறைய சம்பாதிக்கணும், நடந்தா அஜீத் மாதிரி இருக்கணும், சிரிச்சா சூரியா மாதிரி இருக்கணும்னு பொண்ணுங்க கண்டிஷன் போட்டா பசங்க எங்க தான் போவாங்க. பொண்ணுங்க இந்த மாதிரி கல்யாண கண்டிஷன் போடுறதால கல்யாணம் ஆகாமல் இருக்காரு சந்தானம். இதுல 25 லட்சம் கடன் வேற. யாரு கல்யாணம் பண்ணிக்கு வா? ஒரு வழியா ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பிரியாலயா (நம்ம ஹீரோயின் தாங்க ) கல்யாணம் பண்ணிக்க ஒ கே சொல்றாங்க.

பொண்ணோட அப்பா, தம்பி ராமையாவும், தம்பி பால சரவணனும் பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. கல்யாணம் ஆனப்புறம் தான் தெரியுது, இது டுபாகூர் ஜமீன்னு. தம்பி ராமையாவுக்கு ஊரெல்லாம் கடன். சரி ஏமாத்தனதோட நிற்காத தம்பி ராமையா வீட்டோட மாமனாராகவும், தம்பி பால சரவணன் வீட்டோட மச்சினனாகவும் மாப்பிள்ளை சந்தானத்தோட வீட்டல டேரா போடுறாங்க. இதுக்கு நடுவுல கடன் தந்த விவேக் பிரசன்னா, சந்தானத்தோட வீட்ல நடக்கும் விபத்துல இறந்து போய்டுறாரு. இந்த விபத்தை மறைச்சு அப்பாடான்னு மூச்சு விடுற நேரத்துல விவேக் பிரசன்னா உயிரோட வர்றாரு. எல்லாரும் மண்டை குழம்பி கசாயம் ஆகுற அளவுக்கு ஆயிடுறாங்க. இந்த குழப்பதை வச்சு ஒரு சூப்பர் காமெடி படத்தை தந்துருக்காரு டைரக்டர் ஆனந்த் நாராயணன்.

சும்மா சொல்ல கூடாதுங்க. நிஜமாவே முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் நாம சிரிச்சுகிட்டே இருக்கோம். சந்தானம் கல்யாணம் ஆகுறதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறதை பார்க்கும் போது நாலு கல்யாணம் அஞ்சு கல்யாணம் பண்ணவன்லாம் சந்தோசமா இருக்கான்; ஒரே ஒரு கல்யாணம் பண்ண இவர் படுகிற அவஸ்தை இருக்கே அப்பப்பா முடியலடா சாமி என்று சொல்ல தோணுது. சந்தானத்தை ஏமாதிட்டு 'தகிட தத்திதோம் ' என விக்ரம் பட கிளைமாக்ஸ் மியூசிக் பேக் ரவுண்டில் மனோ பாலா நடந்து போகும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது. "மனோ பாலா சார் என்ன அவசரம் சாமிகிட்ட போய்ட்டிங்க" என ரசிகர்கள் பேசினது வருத்தமா இருந்துச்சு.

இதையும் படியுங்கள்:
‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!
Inga naan thaan kingu movie review

சந்தானம் நல்லா நடிச்சுருக்காரு. தான் நடிக்கும் படங்களில், கூட நடிக்கிறவங்களை நல்லா நடிக்க வச்சு அழகு பார்க்கறவரு சந்தானம். இந்த படத்துலயும் தம்பி ராமையாவுக்கும், பால சரவணனுக்கும் நடிக்க நிறைய வாய்ப்பு தந்துருக்காரு. மாமனார் தம்பி ராமையா செய்யும் அலப்பறையை பார்த்து நிறைய ஆண்கள் தன்னோட மாமனாரை நினைத்து டென்ஷன் ஆறது நிச்சயம். பால சரவணன் மாதிரி மச்சினன் இருந்தா பளார்ன்னு கன்னத்தில் ஒன்னு விட்டுருவோம்ன்னு யோசிக்கற அளவுக்கு ஒரு டார்ஜர் மச்சினனாக நடிச்சிருக்காரு பாலா. ஹீரோயின் ப்ரியாலயா சும்மா வந்து போகாம கொஞ்சம் காமெடி பண்ணி இருக்காங்க. இமானின் இசையில் மாயோனே பாட்டு செம ரொமான்ஸா இருக்கு. ஒளிப்பதிவும் குறை சொல்ற மாதிரி இல்லை.

சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான GN அன்பு செழியன் இந்த படத்தை தயாரிச்சுருக்காரு. கடன் வங்க கூடாதுன்னு சொல்ற கதைக்கு ஒகே சொன்னதுக்கே அன்புவை பாராட்டலாம். கொஞ்சம் மெசேஜ், நிறைய சிரிப்பு வேணும்ன்னு நினைக்கறவங்க இந்த படத்தை பாருங்க. ஆனா, முக்கியமா லாஜிக் பாக்காதீங்க.

logo
Kalki Online
kalkionline.com