‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

Kavin's Next Film
Kavin and Andreah

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் மாஸ்க் என்ற படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதயடைத்து, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கவினின் டாடா படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப்பெற்றது. இதனையடுத்து கவின் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் கூடின. இதனையடுத்து அவருடைய ஸ்டார் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதன்பிறகு சமீபத்தில் நெல்சன் தயாரிப்பில் Bloody Begger என்ற படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே, கவின் ஒரு சவாலான கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்று ரசிகர்கள் கணித்துவிட்டனர். இதனையடுத்து தற்போது அவரின் அடுத்தப் படத்திற்கான அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

காக்கா முட்டை, விசாரணை, கொடி ஆகிய படங்களை தயாரித்த க்ராஸ் ரூட் கம்பனி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் மாஸ்க். இந்தப் படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் sp சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

மாஸ்க் திரைப்படத்தை விகர்ணன் அசோக் இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட் வுட்ஸ் சிறந்த குறும்படம் கோல்ட் மெடல் விருது பெற்றவராவர். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார்.  மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், VJ அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ராமர் படத்தொகுப்பு, கலை இயக்குனராக ஜாக்கியும், ஆடை வடிவமைப்பாளர்களாக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். நேற்று மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
"ஆடியோவில் இருப்பது என் குரல் இல்ல" சுசித்ரா முன்னாள் கணவர் பகீர்!
Kavin's Next Film

இப்படத்தைப் பற்றி இணையத்தில் எந்த ஒரு முன்னறிவிப்புமே இல்லை. திடீரென்று படக்குழு பூஜை போட்டு பணியை ஆரம்பித்தது. இதனையடுத்து படத்தின் கதை பற்றி எதுவும் தெரியவரவில்லை. டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் மட்டுமே படத்தின் கதைப் பற்றிய ஹின்ட் கிடைக்கும். விரைவில் இப்படத்தை பற்றிய தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com