சந்தானத்தின் அடுத்தப் படத்தின் அறிவிப்புத் தேதி வெளியீடு!

Santhanam
Santhanam

சந்தானம் நடிப்பில் உருவான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் அறிவிப்புத் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கிறது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தையடுத்து வெளியாகும் சந்தானத்தின் இந்தப் படம், X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சிறந்த காமெடியனாக வலம் வந்த சந்தானம் பின்னர் மெயின் ஹீரோவாக களமிறங்கி பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுமே நகைச்சுவை கலந்ததாகத்தான் இருக்கும். அது அவரின் தனி ஸ்டைல் என்றே கூறலாம். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான DD Returns படம் ரசிகர்களை ஓரளவுத் திருப்தி செய்தது என்றே கூற வேண்டும். அதன்பின்னர் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படமும் நகைச்சுவையில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இதனையடுத்து சந்தானம் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் நடித்துள்ளார்.

எழிச்சுர் அரவிந்தன் எழுத்தில், இப்படத்தை ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். அதேபோல் கோபுரம் பிலிம் ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா நடித்துள்ளார் என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உட்பட பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவுள்ளார்.

மனோபாலா சென்ற ஆண்டு மே மாதமே உயிரிழந்தார். ஆகையால், அதற்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், வெகு மாதங்களாகவே படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனையடுத்து, சென்ற மாதம்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமலஹாசன் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:
56 வது முறையாக இணையும் மோகன்லால், ஷோபனா… எந்தப் படத்தில் தெரியுமா?
Santhanam

இதனையடுத்து இன்று ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு இன்று காலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஹீரோ, ஹீரோயின் மற்றும் சக நகைச்சுவை நடிகர்களின் படப்பிடிப்பு போஸ்டருடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் இந்தாண்டு மே மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படம் விடுமுறை நாட்களில் வெளியாகவுள்ளதால், குடும்ப ரசிகர்களுக்கு ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் மூவியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com