56 வது முறையாக இணையும் மோகன்லால், ஷோபனா… எந்தப் படத்தில் தெரியுமா?

Mohan lal and Shobana
Mohan lal and Shobana

‘தளபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஷோபனா, தற்போது மோகன்லாலுடன் இணையவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இது மோகன்லால் மற்றும் ஷோபனா இணைந்து நடிக்கும் 56வது படமாகும்.

1980ம் ஆண்டு தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபனா, 1984ம் ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமானப் படங்கள் நடித்துவந்தார். குறிப்பாக, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நிறைய படங்கள் நடித்த இவர், தமிழில் கடைசியாக கோச்சடையான் படத்தில் நடித்தார். அதேபோல் மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடிக்காத ஷோபனா, தற்போது ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் அவரது 360வது படத்தில் ஷோபனா இணைந்துள்ளார். ராஜபுத்ரா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படம், மலையாள சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது. ஷோபனா கடைசியாக துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பில் வெளியான ‘வரனே அவஷ்யமுன்ட்’ என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் அவர் மலையாளத்தில் நடிக்கவில்லை.

Vintage Mohanlal and Shobana pairup
Vintage Mohanlal and Shobana pairup

ஷோபனா வெளியிட்ட வீடியோவில், அவர் பேசியதாவது, “நான் ஒரு மலையாள படத்தில் கம்மிட் ஆகியுள்ளேன். இந்தப்  படத்தை சுனில் எழுத்தில் தருண் மூர்த்தி  இயக்குகிறார். படத்தின் தயாரிப்பாளர் ராஜபுத்ரா ரஞ்சித். ஆம்! இது மோகன்லாலின் படம்தான். இது அவரது 360வது படமாகும். அவருக்கு வாழ்த்துக்கள். இது நாங்கள் இணைந்து நடிக்கும் 56வது படம் என்று நினைக்கிறேன். ஆகையால், மிகவும் உற்சாகமாக உள்ளது. அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!” என்று பேசினார்.

இதன்மூலம் ஷோபனா L360 படத்தில் இணைவது அதிகாரப்பூர்வமானது. ஷோபனா மற்றும் மோகன்லால் ஆகியோர் தென்மவின், கொம்பத்து, பவித்ரம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆகையால், மலையாள சினிமா ரசிகர்களுக்கு, அவர்கள் மிகவும் பிடித்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு ஜோடியாகும். இதனையடுத்து மீண்டும் அவர்கள் இணைவது மலையாள சினிமாவில் ஒரு பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்று மாலை 6 மணிக்கும் வெளியாகும் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் அப்டேட்!
Mohan lal and Shobana

ஏற்கனவே இது மோகன்லாலின் 360வது படம் என்பதால், ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இந்தநிலையில் ஷோபனாவின் இந்த அறிவிப்பு, மேலும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆகையால், X தளத்தில் மோகன்லால் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com