லோகேஷ் கனகராஜ் படத்தில் ஸ்ருதிஹாசன்.. அட்டகாசமான போஸ்டரால் ரசிகர்கள் உற்சாகம்!

Lokesh Kanagaraj, Shruthi Hasan
Lokesh Kanagaraj, Shruthi Hasan

லார் படத்தில் நடித்து அசத்திய நடிகை ஸ்ருதிஹாசன், தனது தந்தையின் தயாரிப்பிலேயே அடுத்த படம் கமிட்டாகியுள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதனை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை அதிரடியாக அறிவித்து விட்டார் கமல்ஹாசன். இவர் வெளியிட்டுள்ள பதிவில், "Inimel Delulu is the New Solulu" என கேப்ஷன் போட்டு லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இருக்கும் சூப்பர் ஸ்டில் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.

ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் ஸ்ருதி ஹாசன் உடன் லோகேஷும் இருக்கிறார். இதனால், மாஸ்டர், சிங்கப்பூர் சலூன் படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்திலும் நடிக்கப் போகிறாரா என்கிற ஆர்வத்தையும் அந்த போஸ்டர் தூண்டியிருக்கிறது. ஆனால், ஸ்ருதிஹாசனின் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தை லோகேஷ் இயக்குவார் என்றே தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
உலகம் முழுவதும் ROUND கட்டி அடிக்கும் ‘உருள்’ என்ற சொல்!
Lokesh Kanagaraj, Shruthi Hasan

மேலும் இந்த ப்ராஜெக்ட் பற்றி வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதனால் இது படமா, மியூசிக் ஆல்பமா எனவும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com