உலகம் முழுவதும் ROUND கட்டி அடிக்கும் ‘உருள்’ என்ற சொல்!

உருள்...
உருள்...
Published on

ன்றைய பதிவில் உருள் என்ற தமிழ் வேர்ச்சொல் எப்படி உலகம் முழுவதும் பரந்து பல சொற்களை வழங்கியது என்று பார்ப்போம்! ‘காலங்காலமாக நாம் பயன்படுத்தி வரும் பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு உருள் எனு‌ம் தமிழ்ச்சொல்தான் மூலமா?’ என வியந்து போவீர்கள்!

உருள் - எனும் வினையடிச் சொல்லிற்கு உருளுதல், உருண்டோடுதல், சுற்றி வருதல் என்பது பொருள்.

உருள் > உருள்தல்.
உருள் > உருளி = உருளும் சக்கரம்.
உருள் > உருளை = உருண்டை.
உருளை = வட்டம், சக்கரம்.
உருள் > உருட்சி.
உருள் > உருட்டு > உருட்டல்.
உருள் > உருட்டு > உருட்டி... எனத் தமிழ் மொழியில் பல வகையான சொற்களைப் படைக்கும்.

வாருங்கள், பிற மொழிகளில் எத்தனையெத்தனை சொற்களைத் தந்தது என்று தெரிந்துகொள்வோம்.

தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்களுடன் அமைந்த சொற்கள் பிற மொழிகளில் தலையிழந்த நிலையில் உருமாற்றமடைந்து திரிவதே வழமை என்பதால் 'உ' - எனும் முதலெழுத்து மறைந்தது!

* உருள் > ரோல் (ROLL)
   உருட்டு > ரொடேட் (ROTATE).

* உருள் > உருட்டு > ரோடா > ரொடேட்.  இலத்தீன் வழியாக ஆங்கிலம் சென்றடைந்த சொல் இது. இலத்தீனில் Rota - என்றால் wheel.

(Latin) Roto > (English) rotate = Rotary, Rotation.

*  உருள் > உருண்டை > ரொந்தே > ரௌண்ட். (Ronde (French) > Round (ENGLISH)). நகர்வலமாக (rounds) வருவதை ரோந்து என ஃபிரெஞ்சு மொழியில் சொல்வர். ஃபிரெஞ்சு மொழியின் ரோந்து ஆங்கிலத்தில் ரௌண்ட் ஆனது!

* உருள் > உருளை > உருடை > ரோதை. உருடை, ரோதை இரண்டும் சக்கரத்தைக் குறிப்பன.
ரோதை செல்லும் பாதையே ஆங்கிலத்தில் ROAD ஆயிற்று.

* உருட்டிச் செய்யப்படும் மாவுப்பண்டம் என்பதால்… 'உருட்டுதல்' பொருள் கொண்ட தமிழ்ச் சொல்லிலிருந்து பிறந்த சொல் ரொட்டி!
உருட்டி > ROTI. ரொட்டி = உருட்டப்பட்ட மாவுப் பண்டம்!

இதையும் படியுங்கள்:
ஆண்களே! புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
உருள்...

அடுத்து, உருள் > சுருள் என்று மேலும் திரியும்.
சுருள் > சுருளை > ஸ்க்ரோல். (ஆங்கிலத்தில் scroll (a roll of paper or parchment)) .

சுருள் > சுருளி.
சுருள் > சுருட்டு (தமிழ் மொழியில் சுருட்டு என்ற ஆங்கிலத்தில் cheroot ஆனது).

தமிழ் மொழியில் மெய்யெழுத்தோடு தொடங்கும் சொற்கள் ஆங்கிலத்தில் H என்பது முதலெழுத்தாக மருவுதலும் இயல்பான ஒன்றே! அந்த வகையில், ஆங்கிலத்தில் சுழற்றி எறிவதைக் குறிக்கும் HURL என்ற சொல்லின் மூலமும் உருள்தான்!
உருள் > HURL.

அடுத்தப் பதிவில் மேலும் சில சொற்களைக் காண்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com