இறைவன் மிகப் பெரியவன்!

இறைவன் மிகப் பெரியவன்!

Published on
-ராகவ் குமார்.

சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்பு டைரக்டர் அமீர் படம் இயக்கியுள்ள படம் "இறைவன் மிகப் பெரியவன்"!  படத்தின் டைட்டிலில் இஸ்லாமியர்களின் பிறை, கிறிஸ்துவர்களின் சிலுவை, மற்றும் இந்துகளின் முருகவேல் மூன்றும் இடம் பெற்று உள்ளது.

இப்படத்தின் கதையை எழுத்தாளர் தங்கம் மற்றும் இயக்குனர் வெற்றி மாறன் இணைந்து எழுதி உள்ளார்கள்.கரு. பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஜாதி, மத ரீதியாக நம்மை யார் பிரிக்க நினைத்தாலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற கருத்தை வலியுறுத்துவதாக உள்ள படம் இது என்கிறார் டைரக்டர் அமீர்.

" மேலும் நான், இயக்குனர் கரு. பழனியப்பன், வெற்றி மாறன், மறைந்த இயக்குனர் ஜனநாதன் ஆகிய வெவ்வேறு சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் என்றாலும் நெருங்கிய நண்பர்கள். இந்த நாலாவரின் நட்பை இப்படம் பிரதிபலிக்கும்"  என்கிறார்  அமீர்.

logo
Kalki Online
kalkionline.com