Thuglife: ஜெயம்ரவிக்கு பதிலாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்! யார் தெரியுமா?

Thug life cast
Thug life
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

Thuglife படத்திலிருந்து ஜெயம்ரவி விலகியதையடுத்து படக்குழு பல நடிகர்களிடம் பேசி வந்தது. இதனையடுத்து தற்போது அவர் இடத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவரை உறுதி செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug life படத்தில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாக சென்ற ஆண்டே செய்திகள் வந்தன. த்ரிஷா தனது கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்து விட்டதாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். அந்தவகையில் முதலாவதாக தக்லைஃப் படத்திலிருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் விலகுவதாக செய்திகள் கசிந்தன.

அவர் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புறநானூறூ படம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால், பிஸி லைனப்பில் உள்ள துல்கருக்கு தக்லைஃப் படத்தில் நடிக்கப் போதிய நாட்கள் இல்லாததால் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. அடுத்ததாக ஜெயம் ரவியும் படத்திலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது. ஏனெனில் ப்ரெதர், ஜீனி உட்பட இந்த ஆண்டு மட்டும் அவர் 4 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால் தேதி கிடைக்காமல்தான் அவரும் விலகியதாகக் கூறப்பட்டது.

இந்தநிலையில் தற்போது ஜெயம் ரவியின் கதாப்பாத்திரத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளன. அசோக் செல்வன் சமீப காலமாக நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து ஹிட் கொடுக்கிறார். ஆகையால், அவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்றுமா ஓடிடி பிளஸ்?
Thug life cast

சமீபத்தில் அசோக் செல்வனின் போர் தொழில், பொன் ஒன்று கண்டேன் ஆகிய படங்கள் நல்ல ஹிட்டானது. பொன் ஒன்று கண்டேன் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.

இதனையடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசன் நடிக்கவுள்ளார். சமீபத்தில் Sigma Thug Rules என்ற ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்டைப் படக்குழு வெளியிட்டது. ஆகையால், Thug life படம் தொடர்ந்து மிரட்டலான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com