பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

Bahubali Prabhas
Bahubali Prabhas

தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனக்கு ஸ்பெஷலான ஒரு நபர் குறித்து பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில்  ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். Rebel Star என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் இருந்து வருகிறார். முன்னதாக, இவரின் படங்கள் ஃப்லாப் மற்றும் ஹிட் என கலந்த படங்களாகவே வெளிவந்துக் கொண்டிருந்தன.

ஆனால், பாகுபலி 1 மற்றும் 2 க்கு பிறகு இவரது மார்க்கெட் ஒரேடியாக உச்சத்தை எட்டியது. இதனால், அவர் பெரிய பட்ஜெட் படங்களில் அதிகம் கம்மிட்டாக ஆரம்பித்தார். பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2ம் பாகங்களின் வெற்றி, இவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. 500 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படங்களில்தான் பிரபாஸ் சைன் செய்தார்.

இதனால், அவர் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும், பாகுபலி படத்திற்கு பிறகு விமர்சன ரீதியாக அவருடைய படங்கள் வெற்றிபெறவில்லை என்றே கூறவேண்டும். சமீபத்தில் வெளியான சலார் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து தற்போது இந்தியா முழுவதும் பிரபாஸின் கல்கி படத்திற்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில், நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இந்த படம், வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. 

அந்தவகையில் தற்போது பிரபாஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “Darlings!!... Finally someone very special is about to enter our life… Wait cheyandi…” என்று பதிவிட்டிருக்கிறார். அதாவது, “இறுதியாக ஒரு முக்கியமான நபர் நம் வாழ்க்கையில் நுழையவிருக்கிறார். காத்திருங்கள்.” என்று பதிவிட்டிருக்கிறார். ஆகையால், இது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பாக இருக்குமோ? என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!
Bahubali Prabhas

ஏற்கனவே பாகுபலி படத்திலிருந்து அனுஷ்காவும் பிரபாஸும் காதலிக்கிறார்கள் என்றும், அதன்பிறகு அவர்கள் ப்ரேக்கப் செய்துவிட்டார்கள் என்றும் வதந்திகள் வந்தன. ஆனால், அதைப்பற்றி இதுவரை இருவருமே வாய்த் திறக்கவில்லை.

இந்தநிலையில் தற்போது அவரின் இன்ஸ்டா பதிவினால், அந்த ஸ்பெஷல் ஒன் அனுஷ்காவாக இருக்குமோ என்று ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். எதுவாயினும், இன்னும் சில காலங்களில் இந்த பதிவைப் பற்றிய முழு விவரமும் தெரிய வரும் என்பதால், பிரபாஸ் சொன்னதுபோல் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com