“கடனை அடைக்கதான் இந்தப் படம்” – ‘இங்கு நான்தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

Santhanam
Santhanam
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

‘இங்கு நான் தான் கிங்கு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சந்தானம், “வாங்குன கடனுக்கு தான் இந்த படம் பண்ணுனேன்” என்று கூறியது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

சிறந்த காமெடியனாக வலம் வந்த சந்தானம், பின்னர் மெயின் ஹீரோவாக களமிறங்கி பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுமே நகைச்சுவை கலந்ததாகத்தான் இருக்கும். அது அவரின் தனி ஸ்டைல் என்றே கூறலாம். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'DD Returns' படம் ரசிகர்களைத் திருப்தி செய்தது என்றே கூற வேண்டும். அதன்பின்னர் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படமும் நகைச்சுவையில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இதனையடுத்து சந்தானம் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் நடித்தார்.

எழிச்சுர் அரவிந்தன் எழுத்தில், இப்படத்தை ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். அதேபோல் கோபுரம் பிலிம் ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா நடித்துள்ளார் என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உட்பட பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவுள்ளார்.

மனோபாலா சென்ற ஆண்டு மே மாதமே உயிரிழந்தார். ஆகையால், அதற்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், வெகு மாதங்களாகவே படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனையடுத்து, சென்ற மாதம்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமலஹாசன் வெளியிட்டார்.

அந்தவகையில், இப்படம் இன்று வெளியானது. இந்தநிலையில், இங்கு நான் தான் கிங்கு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் வருகை தந்த சந்தானம், படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பேசினார்.

இதையும் படியுங்கள்:
ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையையே மாற்றிய அம்மாவின் நகை!
Santhanam

அதாவது, “எனக்கு நடிக்கிற வேலை இல்லையென்றால், பத்திரிக்கையாளர் பணிக்கு தான் வந்திருப்பேன். இந்த ஒரு வேலை தான் எப்போதும் பிஸியாக இருக்கிறது. கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு போனீங்க. அதேமாதிரி இங்க நான் தான் கிங்கு படமும் சூப்பராகவும், ஜாலியாகவும் இருக்கும். கடன் வாங்கக்கூடாது என இந்த படத்தின் கதை இருக்கும். ஆனால் வாங்குன கடனுக்காகதான் இந்த படம் பண்ணியிருக்கேன். இந்த படத்தை எல்லாரும் பாருங்க” எனக் கேட்டுக்கொண்டார். 

logo
Kalki Online
kalkionline.com