என்னது… ஜாக்கி சானுக்கு வயசாயிடுச்சா? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!

Is Jackie Chan too old? A viral photo!
Is Jackie Chan too old? A viral photo!https://bouncenationkenya.com

90’ஸ் கிட்ஸ்களின் நாயகன், ஆக் ஷன் ஹீரோ என இன்னும் பல பெருமைகளுக்கு உரியவர்தான் நடிகர் ஜாக்கி சான். இவர் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகர். 90’ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களின் சிறுவயது நினைவுகளோடு பிணைக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் என்றால் அது ஜாக்கி சான்தான். பொதுவாகவே சினிமாவில் வரக்கூடிய சண்டைக் காட்சிகள் பெரும்பாலான ரசிகர்களைக் கவருவதில்லை, ஆனால், இவருடைய சண்டைக் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி, உலகளவில் புகழின் உச்சத்தைத் தொட்டவர் இவர்தான்.

70 வயதை எட்டியுள்ள ஜாக்கி சானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது உலகளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

உலகளவில் பிரபலம்: ஜாக்கி சான் 1954ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் எனும் இடத்தில் பிறந்தார். அதன் பிறகு 1962ம் ஆண்டு வெளியான. 'பிக் அண்ட் லிட்டில் வாங் டின் பார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறையில் அறிமுகமானார். பிறகு 1972ல் புரூஸ் லீ நடிப்பில் வெளியான ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.

அடுத்த ஆண்டு வெளியான ‘என்டர் தி டிராகன்’ படத்திலும் இரண்டாவது முறையாக புரூஸ் லீ உடன் இணைந்து நடித்தார். பின்னர் பல குங்ஃபூ படங்களில் நடித்து வந்த அவருக்கு, 1980ம் ஆண்டு வெளியான இவருடைய ‘டிரங்கன் மாஸ்டர்’ படம் ஜாக்கியை உலகளவில் பிரபலமடையச் செய்தது. தன்னுடைய கடின உழைப்பால் படிப்படியாக உயரத்தை எட்டிய ஜாக்கி தனக்கென ஒரு நடிப்புப் பாணி மற்றும் ரசிகர் கூட்ட சாம்ராஜ்யத்தையும் உருவாக்கி இருக்கிறார்.

ஸ்டன்ட் சூப்பர் ஸ்டார்: ஜாக்கி சான் படங்களின் சண்டைக் காட்சிகளுக்காகவே ரசிகர் கூட்டம் அலைமோதும். ஏனெனில், அந்தளவிற்கு இவருடைய சண்டைக் காட்சிகள் மக்களை கவர்ந்திழுத்தன. அதோடு, ஸ்டன்ட் நடிகர்கள் எந்தளவுக்கு உயிரைப் பணயம் வைத்து நடிக்கின்றனர் என்பதையும் படத்தின் இறுதியில் ப்லூப்பராக (Blooper) வெளியிடும் வழக்கத்தைக் கொண்டவர் இவர்தான். குறிப்பாக, இறுதியில் போடப்படும் இந்தக் காட்சிகளுக்காகவே நடிகர் ஜாக்கியின் திரைப்படங்களை பெரிதும் ரசிக்கும் மக்கள் இன்றளவும் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
20 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... கவுண்டமணி வழக்கில் தீர்ப்பு!
Is Jackie Chan too old? A viral photo!

வைரலாகும் புகைப்படம்: ஜாக்கி சானுக்கு கடந்த 2016ம் ஆண்டு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இவருடைய சினிமா பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் திரைப்படங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

தற்போது ஜாக்கி சானின் புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாகப் பரவி பல லட்சம் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. மேலும். அந்தப் புகைப்படத்தில் நாம் அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்த ஜாக்கி சான் வயதான தோற்றத்தில் இடம்பெற்றிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் அந்தப் புகைப்படம் தங்களுக்கு வருத்தமளிப்பதாகவும், ‘ஜாக்கிக்கு வயசாயிடுச்சா?’ என்ற கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com