20 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... கவுண்டமணி வழக்கில் தீர்ப்பு!

goundamani
goundamani

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர். கவுண்டமணி - செந்தில் கம்போவுக்கு இணையாக இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த கம்போவும் காமெடியில் இந்த அளவுக்கு ஜெயிக்கவில்லை என்றும் சொல்லலாம். கவுண்டமணி தற்போது ஹீரோவாக படங்கள் நடித்து வருகிறார். அவர் கடந்த 20 வருடங்களாக சந்தித்து வந்த சொத்து பிரச்சனைக்கு தற்போது சட்டப்படி தீர்வு கிடைத்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. 90களில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய இவர், கடந்த 1996-ஆம் ஆண்டு நளினி பாய் என்பவரிடம் இருந்து, அவருக்கு சொந்தமாக கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த 5 கிரவுண்டு மற்றும் 454 சதுர அடி நிலத்தை கிரையம் செய்து, அங்கு வணிக வளாகம் ஒன்றை கட்ட திட்டமிட்டார்.

அதன்படி அந்த இடத்தை, ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்கிற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் ஒன்றினை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் 3.58 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில், கட்டுமான பணியையும் முடிக்கவில்லை. அதேபோல் 2004 ஆம் ஆண்டு முழுமையாக பணிகளை கைவிட்டுள்ளது. மேலும் இதனை கவுண்டமணி தரப்பில் இருந்து தட்டி கேட்ட நிலையில், கட்டுமான நிறுவனம் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து சில அடியார்களை அங்கு நிறுத்தி அந்த இடத்தை கையகப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த கட்டுமான நிறுவனத்திற்கு எதிராகவும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்களுக்கு எதிராகவும், சொத்தை மீட்டு தரக் கூறியும் கவுண்டமணி தரப்பில் இருந்து 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

goundamani
goundamani

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, கட்டுமான பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராவிட்டால் தான் அதைக் கேட்க முடியும், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே நடிகர் கவுண்டமணியிடம் அந்த கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது. எனவே நடிகர் கவுண்டமணி இடம் பெற்ற ஐந்து கிரவுண்ட் 456 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:
புதிய நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்யவுள்ள கோபிநாத்... ரசிகர்கள் உற்சாகம்!
goundamani

நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கவுண்டமணியிடமிருந்து பணம் பெற்று பிறகும் அந்நிறுவனம் கட்டுமான பணியை முடிக்காததால் அந்த சொத்தை சட்டபூர்வமாக வைத்திருக்க முடியாது என்றும், அதைத்தொடர்ந்து வைத்திருக்க உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது.

அதேபோல் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு கட்டுமான நிறுவனம் இந்த சொத்தின் உரிமையாளர் இல்லை என்பதால், சொத்தின் ஆவணங்களை வைத்திருக்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை என்றும், கவுண்டமணி ஆவணங்களை திரும்ப பெறுவதற்கான உத்தரவு தவறானது அல்ல... சட்ட விரோதமானது அல்ல.. என்று உறுதி செய்துள்ளனர். மேலும் சட்டபூர்வமாக உரிமையின்றி சொத்தை ஆக்கிரமித்துள்ளதால், நடிகருக்கு இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த சொத்து பிரச்சனைக்கு தீர்வு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com