சிரஞ்சீவியுடன் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Nayanthara and ciranjeevi
Nayanthara and ciranjeevi
Published on

நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க எத்தனை கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று கேட்டால், அசந்துப் போவீர்கள்.

நயன்தாரா கடந்த இருபது ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். அன்போடு ரசிகர்களால் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய துறையில் பல தடைகளை உடைத்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான மனசினக்கரே மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவே, ஐயா மற்றும் லட்சுமி திரைப்படங்கள் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். ஆரம்ப காலகட்டத்திலேயே ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான சந்திரமுகியில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார்.

நயன்தாராவின் திரை வரலாறு அவரது பன்முகத்தன்மையை பறைசாற்றுகிறது. பில்லா மற்றும் ஆதவன் போன்ற வணிக ரீதியிலான வெற்றிப் படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது மட்டுமல்லாமல், மாயா, அறம் மற்றும் கோலமாவு கோகிலா போன்ற பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய சினிமாவின் போக்கையே மாற்றியுள்ளார். இந்த படங்கள் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், பெண் மைய கதாபாத்திரங்களின் வணிகரீதியான வெற்றியையும் நிரூபித்தன.

ஷாருக்கானுடன் இணைந்து நடித்த பாலிவுட் படமான ஜவான் மற்றும் விஜயுடன் பிகில் போன்ற படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக இருந்து வரும் நயன்தாரா அடுத்ததாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள்.

இதையும் படியுங்கள்:
எலான் மஸ்க் பரிந்துரைக்கும் Pomodoro Technique - சாதிக்க சிறந்த வழி தோழர்களே!
Nayanthara and ciranjeevi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com