தமன்னா விஜய் காதல்கதை முடிந்துவிட்டதா? ரசிகர்கள் குழப்பம்!

Tamannah and Vijay varma
Tamannah and Vijay varma
Published on

முன்னணி நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்திகள் கசிந்துள்ளன.

தமன்னா தனது 15 வயதில் 2005ம் ஆண்டு ‘சந்த் சா ரோஷன் செஹ்ரா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தமன்னா நடித்து 2007 ம் ஆண்டு வெளியான ‘கல்லூரி’ என்ற தமிழ் படமும் ‘Happy days’ என்ற தெலுங்கு படமும் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இரண்டு படங்களிலுமே ஒரு கல்லூரி மாணவியாக நடித்து தனது அசாதரண நடிப்பின் மூலம் அனைவரையும் தன் வசம் திரும்பிப் பார்க்கச் செய்தார். தமிழ் திரையுலகில் 2009 ம் ஆண்டுத்தான் தமன்னாவின் வாழ்க்கையையே திருப்பிப்போட்ட ஆண்டாகும். தனுஷுக்கு ஜோடியாக நடித்த ‘பொல்லாதவன்’ படம் அந்த ஆண்டின் முதல் வெற்றியாக அமைந்தது. அடுத்தப் படமே சூர்யாவுடன் ‘அயன்’ படம் நடித்து, தொடர் வெற்றிப்படம் கொடுத்தார் தமன்னா.

பிறகு 2019ம் ஆண்டு வெளியான பெட்ரோமேக்ஷ், ஆக்ஷன் ஆகிய படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. கடைசியாக அவர் தமிழில் ஜெய்லர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி மீண்டும் கம்பேக் கொடுத்தார். ஆனால், அவர் முழு நீள தமிழ் படங்களில் நடித்து வெகுகாலம் ஆகிவிட்டது. இவர் அப்படியே தற்போது பாலிவுட்டில் தொடர்ந்து படம் நடித்து வருகிறார். அதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது காதலன்தான்.

லஸ்ட் ஸ்டோரி வெப்தொடர் மூலம் தமன்னாவும் விஜய் வர்மாவும் சந்தித்து காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலை உறுதி செய்யாமல் இருந்து வந்தார்கள். இருப்பினும் ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகள், பிரபலங்களின் வீட்டு பார்ட்டிகளுக்கு சென்றார்கள். இது காதலா இல்லையா என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

ஆனால், ஒருகட்டத்தில் நேர்காணல்களில் கலந்துக்கொண்ட அவர்கள் தங்களது காதலை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இதை அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இது நிஜமாகவே உண்மையா இல்லையா என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் டேட்ஸ் கொழுக்கட்டை-கார பணியாரம் செய்யலாம் வாங்க!
Tamannah and Vijay varma

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com