
இன்றைக்கு சுவையான டேட்ஸ் கொழுக்கட்டை மற்றும் கார பணியாரம் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
டேட்ஸ் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
பேரிச்சம்பழம்-1 கப்.
துருவிய தேங்காய்-1 கப்.
வெல்லம்-1 கப்.
ஏலக்காய் தூள்-1 சிட்டிகை.
நெய்-1 தேக்கரண்டி.
கொழுக்கட்டை மாவு-1/4 கிலோ.
டேட்ஸ் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் நன்றாக நறுக்கிய பேரிச்சம்பழம் 1 கப், துருவிய தேங்காய் 1 கப், வெல்லம் 1 கப், ஏலக்காய் பொடி 1 சிட்டிகை, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் கொழுக்கட்டை மாவு ¼ கிலோ எடுத்துக் கொள்ளவும். அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்துவிட்டு சுடுத்தண்ணீர் சிறிது ஊற்றி மாவை பிசைந்துக் கொள்ளவும். இப்போது நெய்யை தொட்டு வாழை இலையில் தடவி விட்டு மாவு சிறிது எடுத்து இலையில் வைத்து தட்டிஅதற்கு நடுவில் செய்து வைத்திருக்கும் பேரிச்சம்பழ கலவையை சேர்த்து நன்றாக மூடவும்.
பிறகு இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சூப்பர் சுவையில் டேட்ஸ் கொழுக்கட்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்தத்துட்டு சொல்லுங்க.
கார பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்.
அரிசி-1 கப்.
உளுந்து-1/4 கப்.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1
கேரட்-1
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி-சிறிதளவு.
கார பணியாரம் செய்முறை விளக்கம்.
முதலில் பணியாரம் மாவு செய்ய அரிசி 1 கப், உளுந்து ¼ கப், வெந்தயம் 1 தேக்கரண்டி 4 மணி நேரம் ஊறவைத்து நன்றாக மாவை அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவில் சிறிது உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க விட்டுவிடவும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, துருவிய கேரட் 1 தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது மிக்ஸியில் 2 பச்சை மிளகாய், இஞ்சி 1 துண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது இதை மாவில் சேர்த்துக் கொண்டு வதக்கிய கலவையையும் மாவில் சேர்த்துக்கொண்டு கொத்தமல்லி சிறிது சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது பணியார பாத்திரத்தில் எண்ணெய் சிறிது விட்டு மாவை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கார பணியாரம் தயார்.