கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி கட்டிய கைகடிகாரங்களுக்கு பின்னால் இப்படி ஒரு அர்த்தமா? அவரே சொன்ன தகவல்!

Vijay Sethupathi
Vijay Sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் இன்றும் சினிமா ரசிகர்களால் போற்றப்படும் படமாகும். அந்தவகையில் அந்தப் படத்தில் அவர் கட்டியிருந்த கைகடிகாரங்களுக்கு பின்னால் இருக்கும் அர்த்தத்தை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மண்கண்டன்தான் கடைசி விவசாயி படத்தையும் இயக்கினார். 2022ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பியது. அதேபோல் விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

இப்படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடித்தனர். மணிகண்டனின் அனைத்து படங்களுமே பார்ப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படங்களாகவே இருக்கும். இவர் காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றார்.

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது என்பது மிகவும் குறைவே என்று கூறினாலும் அது தகும். ஏனெனில், அந்தப் படத்தின் கதையாக இருக்கட்டும், நடிகர்களின் நடிப்புத் திறமையாக இருக்கட்டும், அல்லது வசனம் மற்றும் திரைக்கதையாக இருக்கட்டும் அனைத்துமே மிகச்சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கும். இன்றும் மக்கள் போற்றும் படமாக இருக்கும் இந்த படம், பலருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் தாத்தா மாயாண்டி கதாபாத்திரமும் படத்தை ஒருமுறை பார்த்தவர்களின் மனதில்கூட எப்போதும் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களாகும்.

கடைசி விவசாயி படத்தில், விஜய் சேதுபதி தீவிர முருகன் பக்தராக இருப்பார். பட்டையை போட்டுக்கொண்டு எப்போதும் முருகன் கோவிலுக்கு சுற்றித்திரியும் இவர், எப்போதாவது வீட்டுக்கு வந்து மாயாண்டியைப் பார்ப்பார். இவர் இப்படி திரிவதைக் கண்டு ஊர் மக்கள் இவரை பைத்தியம் போல் பாவிப்பர். ஆனால், இவருக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும்.

அதாவது சிறு வயதிலிருந்து காதலித்து வந்த அக்காவுடைய மகளின் மரணத்திற்கு பிறகுதான் அவர் இப்படி மாறியிருக்கிறார் என்று கதைக்களம் அமைந்திருக்கும். அப்படி இருந்தும், தனது அக்கா மகள் தன்னுடனே இருக்கிறாள் என்று சொல்லி தன்னை ஏமாற்றிக்கொண்டு வாழ்வார் என்று பொருள்பட்டிருக்கும். விஜய் சேதுபதியின் அப்பாவான மாயாண்டியும் விஜய் சேதுபதியின் நம்பிக்கையை காப்பாற்றி வருவார்.

இப்படத்தில் மிகவும் பேசப்பட்டது, விஜய் சேதுபதியின் லுக். கை நிறைய கடிகாரங்கள், நாலைந்து சட்டைகள், ருத்ராட்சம் என அவரின் லுக் அட்டகாசமாக இருக்கும்.

இப்போது அந்த கைகடிகாரங்களின் அர்த்ததைப் பார்ப்போம். அதாவது கை நிறைய கைகடிகாரங்கள் அணிந்திருக்கும் அவர், Multi Universe என்று சொல்லப்படும் பல உலகங்களில் வாழ்ந்து வருகிறார் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதாவது அவருடைய அக்கா மகளுடன், முருகனுடன் என பல உலகங்களில் வாழ்ந்து வருகிறார் என்பதை உணர்த்துகிறதாம்.

இதையும் படியுங்கள்:
முதல் நாளே கோடியில் வசூல் அள்ளிய மகாராஜா... எவ்வளவு தெரியுமா?
Vijay Sethupathi

அந்தப் படத்தில் விஜய் சேதுபதி தனது தந்தையைப் பார்க்க வரும்போது முருகன் தன்னுடன் பேசியது போல் ஒரு கதையை கூறியிருப்பார். அதை கவனித்து பார்த்தோமானால், இந்த Multi Universe concept புரியும்.

அந்தவகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பேசிய விஜய் சேதுபதி, "இந்த கதாபாத்திரம் ரொம்ப Spritual ஆனது. அவன் நிறைய Universe ல இருக்கான், அதனால வேற வேற Time ல இருக்கான், அத சொல்லதான் அந்த Watches." என்று கூறினார்.

இதுமட்டுமல்ல, கடைசி விவசாயி படத்தில் இதுபோன்ற பல விஷயங்களை மறைமுகமாகவும், நேராகவும் கூறியிருப்பார் இயக்குநர். "பின்ன விருது வாங்குன படம்னா சும்மாவா?"

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com