முதல் நாளே கோடியில் வசூல் அள்ளிய மகாராஜா... எவ்வளவு தெரியுமா?

Maharaja movie
Maharaja movie

விஜய்சேதுபதியின் மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கலக்கி வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா Maharaja.இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது இது தான் 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். படத்தில், நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் ட்ரெய்லரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
GOAT படத்தில் கேப்டனை போல மற்றொரு பிரபலம்... யார் தெரியுமா?
Maharaja movie

பொதுவாக பல நடிகர்களின் 50வது படம், 100-ஆவது படம் போன்றவை மிகப்பெரும் தோல்வி படங்களாக அமைந்து விடும். இதற்கு காரணம் அந்த படத்தின் மீது ரசிகர்கள் வைக்கும் எதிர்பார்ப்பு எனலாம். ஆனால் இந்த முறை விஜய் சேதுபதிக்கு மகாராஜா திரைப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். முதல் நாளிலேயே இப்படம் உலக அளவில் சுமார் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு, விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதாலும் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். தந்தை, மகள் குறித்த கதை என்பதாலும் இந்த படம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com