ஜெய்லர் 2 படத்தில் கேமியோ ரோலுக்கு பாலய்யா வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Balayya in jailer 2
Balayya in jailer 2
Published on

ஜெய்லர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பாலய்யா ஒரு கேமியோ ரோல் செய்கிறார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்தான செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அதிரடித் திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற சிறைக்காவலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது மகன் ஒரு கும்பலால் கடத்தப்பட்ட பிறகு, அவர் அவர்களைத் தேடி பழிவாங்கும் படலத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் அவர் பல விஷயங்களை சந்திப்பார்.

படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும், நெல்சனின் நகைச்சுவை பாணி ஆங்காங்கே தென்பட்டது. குறிப்பாக, முதல் பாதி ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருந்தது. ரஜினியின் ஸ்டைலான நடிப்பு, சண்டைக் காட்சிகள் மற்றும் அனிருத் இசையமைத்த பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தன.

மேலும், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் போன்ற பல முன்னணி நடிகர்கள் சிறப்பு தோற்றங்களில் வந்து சென்றது படத்திற்கு மேலும் ஒரு கவர்ச்சியாக அமைந்தது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விநாயகனின் நடிப்பு மிரட்டலாக இருந்தது என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

இருப்பினும், படத்தின் இரண்டாம் பாதி சற்று தொய்வாக இருந்ததாகவும், சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்ததாகவும் சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், ரஜினியின் திரை ஆளுமை மற்றும் படத்தின் ஒட்டுமொத்த பொழுதுபோக்கு அம்சம் ஆகியவை இந்த குறைகளை மறக்கச் செய்தன.

உலக அளவில் சுமார் ₹650 கோடி வசூல் செய்த ஜெயிலர், 2023 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ரஜினிகாந்தின் மாஸ் மற்றும் நெல்சனின் இயக்கத்தில் உருவான இந்த அதிரடி திரைப்படம், திரையரங்குகளில் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது என்றால் மிகையாகாது.

இந்தப் படத்தின் 2ம் பாகம் குறித்த செய்தியக்ள் வெளியாகின. இப்படத்தில் நடிகர் பாலய்யா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல் வந்தது. இதில் அவர் கதாபாத்திரம் சற்று நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலாக இருக்கிறது. அதற்காக அவர் 50 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார். அவருடைய கால்ஷீட் தேதிகள் 20 நாட்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
கொசுக்கள் (ஒரு சிலரை மட்டும்) கடிப்பது ஏன்? உங்களை கடிக்குமா? கடிக்காதா?
Balayya in jailer 2

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com