ஐபிஎல் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவர் வாங்கும் சம்பளம் கூறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் என்னத்தான் ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் இந்திய மக்களின் பேரன்பைப் பெற்றவர். அதற்கு முக்கிய காரணம் அவர் இந்திய மக்களிடையே வைத்திருக்கும் அளவுக்கடந்த பிரியம்தான். அவர் என்றும் இந்தியாவை, குறிப்பாக சென்னையே அவருக்குப் பிடித்தமான இடம் என்று கூறுவார். வார்னர் இந்திய பாடல்களையும் திரைப்பட காட்சிகளையும் ரீமேக் செய்தே இந்தியாவில் செல்ல பிள்ளையானார். அவருடைய வலைத்தளங்களில் அதிகம் காணப்படும் வீடியோக்கள் என்றால் அது இந்திய சினிமாவின் ரீமேக் வீடியோக்கள்தான்.
இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 184 போட்டிகளில் விளையாடி 6565 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 62 அரைசதங்களும் அடங்கும். அவர் 2024 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அந்தவகையில் சமீபத்தில் அவர் இந்திய சினிமாவில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வந்தன. அதாவது நிதின், ஸ்ரீலீலா ஆகியோர் நடித்த தெலுங்கு படமான ராபின்ஹுட் படத்தில்தான் வார்னர் நடித்திருக்கிறார்.
வெங்கி குடுமுலா இயக்கிய இந்தப் படத்தில், ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம், சாக்கோ, வெண்ணிலா கிஷோர், மைம் கோபி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரீ ரிலீஸில் டேவிட் வார்னர் ஒரு கலக்கு கலக்கினார். புஷ்பா ஸ்டெப் போட்டும், ஸ்ரீலீலாவுடன் நடனமாடியும் ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்.
இவர் இந்தப் படத்தில் மூன்றே நிமிடம்தான் வந்திருக்கிறார். ஆனால், அந்த மூன்று நிமிடத்திற்காக வாங்கிய சம்பளம்தான் வாய்ப் பிழக்க வைத்திருக்கிறது. இப்படத்தில் நடிக்க 2.5 கோடி ரூபாயும், ப்ரோமோஷனுக்கு 1 கோடி ரூபாயும் என மொத்தம் 3.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறார்.
ஐபிஎல்-ல் இந்தமுறை ஏலம் போகவில்லை. ஆனால், அதில் சம்பாரிப்பதைவிட அதிகமாகவே படத்தில் சம்பாரித்துவிட்டார் என்றே கூறலாம்.