ராமாயணம் படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் இவ்வளவுதானா?

Ramayanam
Ramayanam
Published on

பான் இந்தியா படமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தான செய்திகள் வெளியாகிவுள்ளன.

ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு சைலன்ட்டாக ஆரம்பமானது. இதன் படப்பிடிப்பு விடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்தது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இதற்கு முன்னதாக ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்க யாஷிடன் தான் பேசப்பட்டது. ஆனால் அவர் ராவணன் கதாப்பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று கேட்டு வாங்கி நடிக்கிறார்.

ராமாயணம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் அவருடன் இணைந்து இசையமைக்கவுள்ளார். இவர்தான் Pirates of carribean,  the lion king, Sherlock Holmes, inception, the dark knight, Dune, Interstellar, pearl harbour என உலகளவில் ஹிட்டான நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனவே, ராமாயணம் படத்தின் மேல் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மேலும் கூடின.

இதற்கிடையே ஒருமுறை இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், இப்படம் சில பிரச்சனைகளால் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறினாலும், படம் இன்னும் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டே வருகிறது. இப்படம் வருவதற்கு முன்னரே பல ரூமர்ஸும் வந்துவிட்டன. சாய்பல்லவி மேலும் தனிப்பட்ட முறையில் வதந்திகள் வந்தன. ஆனால், அவர் சொல்லும் விதத்தில் சொல்லி, அனைவரின் வாயையும் அடைத்துவிட்டார்.

தற்போது சீதாவை ராவணன் கடத்தும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன.

இப்படியான நிலையில்தான் படத்தின் ரிலீஸ் தேதியும், சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

1000 கோடிக்கும் மேல் பட்ஜட் போட்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு சாய் பல்லவியின் சம்பளம் வெறும் 15 கோடிதான். இதுவே ஆலியா பட்டோ? தீபிகா படுகோனா? நடித்தால் எவ்வளவு வாங்கியிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்...

இதையும் படியுங்கள்:
மொறு மொறு வடை செய்ய முத்தான சில டிப்ஸ்!
Ramayanam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com