leo
leo

தளபதியுடன் இணையும் பிக்பாஸ் ப்ரபலம் இவரா?

Published on

லியோ நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணையும் படம் . இதில் நடிகை திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாக பல குழுவினர்சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

லியோ படத்தில் தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பகிர்ந்து இருக்கிறார்.அதில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தளபதி விஜயின் 67வது படமான லியோ படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் தொடங்கி இருக்கிறது.

இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் அறிவிப்பு வெளியான பிறகு, படத்தின் டைட்டிலை ஒரு குட்டிடீசருடன் அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதில் சாக்லேட் ஃபேக்டரிஒன்றில் இருக்கும் விஜய் சாக்லேட்டையும், கத்தியையும் ஒரு சேர நனைத்து பிளடி ஸ்வீட் என்றுகூறுகிறார். இந்த டீசர் வெளியாகி நான்கு நாட்களில் சுமார் 40 மில்லியனுக்கும் அதிகமானபார்வையாளர்களை பெற்றிருந்தது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்து இருந்தது. லோகேஷ் கனகராஜன் யூனிவர்ஸ் இந்த படத்தில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 6 ஜனனி இருக்கிறார் என்றும், அவர் விஜய்க்கு மகள் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட அபிராமி வெங்கடாசலம் லோகேஷ் கனகராஜ் உடன் காஷ்மீரில் எடுத்துக்கொண்டபுகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்தபுகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனால் அபிராமியும் லியோ படத்தில் இணைந்து இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் அபிராமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில்அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தநிலையில், தளபதி 67 படத்தில் இணைந்து இருக்கிறார் அபிராமி. லோகேஷ்கனகராஜ் உடன் காஷ்மீரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அபிராமி, இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைவைத்துத்தான் உங்களை எதிர்காலம் உருவாகிறது. அதை இந்த மனிதர் சரியாகசெய்து கொண்டிருக்கிறார்.

என்னுடைய வாழ்க்கைக்கான உத்வேகம் என்று லோகேஷ் கனகராஜை டேக் செய்து அந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதை உறுதிபடுத்தும் விதமாக காஷ்மீரில் பனிப் பொழியும் இடத்தில் வண்டியில் பயணம் செய்வது போலவும், சூரிய ஒளி தன்மீது விழுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, காஷ்மீரில் தனக்கு சூரியன் முத்தமிட்டதாகவும் பகிர்ந்திருக்கிறார். எனவே அவர் இந்த லியோ படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com