
மக்களிடம் தங்கள் நிறுவனத்தின் பெயர் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆஃபர்களை தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது வாரி வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ‘district app’ இணைந்துள்ளது. இதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 10 முதல் 10:10 மணிக்குள் திரைப்பட டிக்கெட் புக் செய்பவர்களுக்கு வெறும் ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படும் என்ற கவர்ச்சிகரமான ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த சலுகை 10 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த சலுகையை பயன்படுத்த, நீங்கள் உங்கள் போனில் ‘district app’ செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணக்கை உருவாக்கி, வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த டிக்கெட் புக்கிங் செய்ய 10 நிமிடங்கள் மட்டுமே காலக்கெடு உள்ளதால் டிக்கெட்டை புக் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிகரித்து போட்டி உணர்வை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
‘district app’ன் இந்த முயற்சி செயலியை மக்கள் எந்த எண்ணிக்கையில் பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இந்த திட்டத்தின் வெற்றி உறுதிசெய்யப்படும். விருப்பமான படத்தை வெறும் 10 ரூபாய்க்கு பெற ரசிகர்களுக்கு இந்த சலுகையை வரப்பிரசாதமாக இருக்கும் என்றாலும் இந்த சலுகையை விரைவாகப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம் என்பதால், ஆர்வமுள்ள பயனர்கள் சரியாக 10 மணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
முன்பு, இதேபோன்ற சலுகைகளை தேசிய சினிமா தினங்கள் போன்ற சிறப்பு நாட்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு வாராந்தோறும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இத்தகைய ஒரு பெரிய தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்திருப்பது, இந்திய டிஜிட்டல் சந்தையில் அதிகரித்து வரும் தொழில் போட்டிகள் மற்றும் வாடிக்கையாளர்களை கவருவதற்கான புதிய உத்திகளைக் காட்டுகிறது என்றே சொல்லலாம். மேலும், இந்த ‘district app’ நிறுவனத்தின் அறிவிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இதுபோன்ற மேலும் பல புதுப்புது சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தியேட்டர்களில் டிக்கெட் விலை விண்ணை முட்டும் வகையில் இருக்கையில் இந்த கவர்ச்சிகரமான ஆஃபர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இனிமேல் சினிமா ரசிகர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் திரைப்படங்களைப் பார்க்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால், குறைந்த கட்டணத்தில் விரும்பமான படத்தை பார்க்க முடியும் என்பதால் சினிமா ரசிகர்கள் எப்போது வெள்ளிக்கிழமை வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.