தியேட்டரில் பார்க்கும் படம் பிடிக்கவில்லையென்றால், 50% கட்டணம் கொடுத்தால் போதும். அதாவது, பாதிப்படம் மட்டும் பார்த்துவிட்டு வெளியே வந்தால், மீதி 50% பணம் ரிட்டர்ன்.
பாதிப்படத்திற்கும் மேல் பார்த்து வெளியே வந்தால், 25%, 30% ரிட்டர்ன்.
கொஞ்ச நேரம் மட்டுமே பார்த்துவிட்டு வந்தால், 60% பணம் வாபஸ்.
கேட்கவே சூப்பரா இருக்குதானே! வாவ்!
இதன் பின்னணி :
கடந்த இரண்டு வருடங்களாக, தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதென புள்ளி விபரம் கூறுகிறது. ரிசர்வ் செய்து படம் பார்க்க சென்றபின், படம் நன்றாக இல்லையென்றாலும் வேறு வழியின்றி பார்க்கவேண்டிய கட்டாயம். இதற்கு ஒரு யோசனையை PVR INOX நிறுவனம் கண்டு பிடித்து, அறிவிப்பு செய்துள்ளது.
பி.வி.ஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்புப்படி, ஒரு படத்தை ரசிகர்கள் எவ்வளவு நேரம் தியேட்டரில் பார்க்கிறார்களோ, அந்த அளவிற்கு மட்டுமே டிக்கட் கட்டணம் கொடுத்தால் போதும் என்பதாகும். நாடு முழுவதும் இத்திட்டம் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
"டிக்கட் ரிசர்வ் செய்பவர்கள், டிக்கட் பணத்திற்கு மேல் 10% கூட கொடுக்கவேண்டும். ஏ ஐ கேமரா மூலம், படம் பார்ப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இதன் மூலம் ரசிகர்கள் வருவது, போவது என எல்லாவற்றையும் கவனித்து டிக்கட் கட்டணம் கணக்கிடப்படும். முதலில் இத்திட்டம், பெரிய நகரங்களில் அறிமுகப்படுத்தியபிறகு, படிப்படியாக விரிவு படுத்தப்படும்" என PVR INOX நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் சமீபத்தில் கூறியுள்ளார்.
ரசிகர்கள் டிராபிக் காரணம், 30-40 நிமிடங்கள் தியேட்டருக்கு லேட்டாக சென்றாலும், டிக்கட்டில் சலுகை உண்டு. மொத்தத்தில் எவ்வளவு நேரம் உள்ளே அமர்ந்து படம் பார்க்கிறோமோ, அதற்கேற்றாற் போல டிக்கட் கட்டணம் கொடுத்தால் போதும்.
இது PVR INOX அரங்கில் சினிமா பார்க்கச் செல்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
என்ன மக்களே இது எப்புடீ ?