முன்பதிவில் சாதனை படைக்கும் ஜெயிலர் 2: விஜய் சேதுபதி, சந்தானம் காட்சிகள் நீக்கமா?

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்திலிருந்து முன்னணி நட்சத்திரங்களின் காட்சிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
jailer 2
jailer 2
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

ஜெயிலர் -2 திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பான் இந்தியா அளவிலும் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளதால் ரிலீஸ் மீது அதே கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை முன்பதிவில் மட்டும் ₹35 கோடி வசூலித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. முன்பதிவிலேயே அதிக வசூலை அடைந்ததால், இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பெரிய அளவில் இருக்குமா? என்று எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படம் முதல் நாளில் ₹150 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் சினிமாவில் சாதனையை செய்தது. அந்த சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் முறியடிக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 'கூலி' திரைப்படத்தை விட ஜெயிலர்- 2 திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக அந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனது திரைக்கதைகளில் நகைச்சுவை அம்சங்களையும், சுவாரசியமான திருப்பங்களையும் அமைத்து குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் திரைப்படங்களை எடுப்பவர். மேலும் இந்த திரைப்படத்தில் ஏராளமான பான் இந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் கூடுதல் அம்சமாக பாலிவுட் திரை உலகை கவரும் வகையில் , அதிரடியான வைப் இசையுடன் நோரா பதேகியின் நடனமும் இடம்பெறும் பாடல் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெயிலர் -2 திரைப்படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களையும் ஊடகங்களையும் தற்போது ஆக்கிரமித்து உள்ளன. இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு நகைச்சுவை நடிகர் தோற்றத்தில் மீண்டும் சந்தானம் நடித்துள்ளார். சந்தானம் ஏற்கனவே ரஜினிகாந்தின் 'குசேலன்' மற்றும் 'எந்திரன்' திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். சமீபத்திய வருடங்களில் சந்தானம் நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவர் கதாநாயகனாக மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன் என்ற நிபந்தனையும் வைத்திருந்தார்.

Santhanam Rajini
Santhanam Rajinifilmibeat

தொடர்ச்சியாக சந்தானம் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததை தொடர்ந்து, அவர் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். 'லொள்ளு சபா' காலத்தில் இருந்து சந்தானமும் , நெல்சன் திலீப்குமாரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ரஜினி உடன் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஏராளமான திரைப்படங்களில் விஜய் சேதுபதி கேமியோ தோற்றத்தில் நடித்து வருபவர். ஆனால் , படத்தின் டிரைலர் காட்சிகள் மற்றும் விளம்பர நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியும் சந்தானமும் கலந்து கொள்ளவில்லை. இது பற்றி திரைப்பட நடிகரும் முன்னாள் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தனது யுடியூப் சேனலில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஜெயிலர் -2 திரைப்படத்தின் அதிக நீளம் காரணமாக விஜய் சேதுபதியும் சந்தானமும் நடித்துள்ள காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஏராளமான பான் இந்திய நடிகர்கள் நடித்துள்ளதால் படத்தின் நீளம் அதிகரித்துள்ளது. அதனால், மாற்று மொழி நடிகர்களின் முக்கியத்துவம் கருதி , இவர்களின் காட்சிகளை மட்டும் படக்குழு நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி விஜய் சேதுபதி மற்றும் சந்தானத்தின் ரசிகர்களை அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com