

தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக அதன் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் ,விடுமுறை காலத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
நவராத்திரி மற்றும் இந்த தசார பண்டிகை காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறை விடப்படுகிறது. இந்த காலகட்டங்களில் மக்கள் அதிக அளவில் திரையரங்குகளில் கூடுவார்கள். அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு திரைப்படத்தை வெளியிட்டால், வசூல் தாக்கத்தினை அதிகரிக்க முடியும் என்று பட தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.
அது மட்டுமல்லாமல் பட வெளியிட்டு தேதியை முன் கூட்டியே வெளியிட்டதால் , மற்ற முக்கிய நடிகர்களின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்படலாம். சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள ' ஓம் ’ திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . ஜெயிலர் 2 வெளியிட்டின் காரணமாக அது தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உச்சபட்ச மார்க்கெட் உள்ள நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். 2000 களின் பிற்பகுதிகளில் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்யும் நடிகராகவும் ரஜினிகாந்த் இருந்தார். இது மட்டுமல்லாமல் மிக நீண்ட காலமாக இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கூறிய ஒரு கதை, விஜய் பற்றி தான் என்று சமூக வலைதளங்களில் சிலர் வதந்தியை பரப்பினர். அதன் பின்னர் வெளிப்படையாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர்.
விஜய் அரசியலுக்கு வந்ததும் , ரஜினி அரசியலில் இருந்து விலகியதை பற்றி விஜய் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். தற்போது விஜய் அரசியலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். அவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. விஜயின் இறுதி திரைப்படம் என்பதால் இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும், என்று விஜய் ரசிகர்கள் முடிவில் உள்ளனர்.
தமிழகத்தின் பொதுமக்கள் மற்றும் அண்டை மாநில மக்களும் எதிர்பார்ப்பில் இருப்பதால் , இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என்று தெரிகிறது. இதுவரையில் தமிழ் சினிமாவின் உச்ச வசூல் சாதனை ரஜினியிடம் உள்ளதால் , அதை முறியடிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் செயல்படுவார்கள். ரஜினி காந்த் தன்னுடைய இடத்தினை தக்க வைக்க முயற்சி செய்வார் அல்லது ஜனநாயகன் வசூலை மிஞ்ச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஜெயிலர் 2 வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஒரு வண்டி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிருத்திக் ரோஷன் , ஜாக்கி ஷெராப் போன்ற பாலிவுட் பெரிய நடிகர்களும் , பெங்கால் சூப்பர் ஸ்டார் மற்றும் பாலிவுட்டில் மார்க்கெட் உள்ள மிதுன் சக்கரவர்த்தியும் , ஹிந்தியில் புகழ்பெற்ற வித்யா பாலன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பல முக்கிய மலையாள நடிகர்கள் , கன்னடத்தின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார் , தமிழ் தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் சேதுபதி, SJ.சூர்யா , ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதாவது ஒவ்வொரு மொழியிலும் நன்கு பரிச்சயமான நடிகர்கள் நடித்துள்ளதால் , படம் அங்கு வெற்றி பெறுவது எளிதாக இருக்கும். இது தான் ரஜினியின் தற்போதைய வெற்றிக்கான "பான் இந்தியா ரூட்" பார்முலாவாக இருக்கிறது. ஜெயிலர் 2 வின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் ₹1000 கோடி வசூலை தொட்ட நடிகராக சாதனை செய்ய வேண்டும் என்ற முடிவில் ரஜினி இருக்கிறார்