இணையத்தை கலக்கும் ஜனநாயகன் பட டிரைலர்..!

Jana Nayagan trailer launch poster
Jana Nayagan trailer launch posterimage credit-indiatoday.in
Published on

'ஜனநாயகன்' படம் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், மாலை 6.45 மணி அளவில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் எச் வினோத் இயக்கியுள்ளார். மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளம் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது, கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.அனிருத் இசையில் இதுவரை வெளியான 4 பாடல்களும் செம்ம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..இந்த ட்ரெயிலர் கட் ஆனது, 2.52 நிமிடங்கள் கொண்டதாக இருக்கிறது.இந்த ட்ரைலரில் ஆக்‌ஷன் காட்சிகளும், அரசியல் பஞ்ச்களும் அதிகம் நிறைந்துள்ளது.பொங்கல் வெளியீடாக இந்தப் படம் வெளியாகிறது.தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைபோல், டிரெய்லரில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com