ராம் சரணுடன் இணையும் ஜான்வி கபூர்?

Janhvi Kapoor to join with Ram Charan.
Janhvi Kapoor to join with Ram Charan.Imge credit: Gold Andhra News

ராம் சரண் நடிக்கவுள்ள அவருடைய 16வது படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனால் ராம் சரண் என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பெயரிடப்படாத ராம் சரணின் அடுத்தப் படத்தை RC16 என்ற பெயரில் அழைக்கின்றனர். புச்சி பாபு சனா இயக்கும் இப்படம் ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்ற வதந்தி பரவி வருகிறது. ஆனால் படக்குழு இதைப்பற்றி வாயையே திறக்கவில்லை.

இயக்குனர் புச்சி பாபு சனா 2018ம் ஆண்டு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக வேலை செய்தார். அதேபோல் 2021ம் ஆண்டு கீர்த்தி ஷெட்டி நடித்த ‘உப்பன்னா’ என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் ராம் சரணின் அடுத்தப் படத்தை அவரே எழுதி இயக்கவுள்ளார்.

மேலும் RC16 படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. இவர் ஜெய்லர் படத்தில் கேமியோ ரோல் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்றார். அதேபோல் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் ராம் சரணின் அடுத்த படத்தில் தானும் இணைந்து நடிக்கவுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராம் சரணின் RRR படம் இந்திய அளவில் செம்ம ஹிட் கொடுத்தது. அதன்பின்னர் சங்கர் இயக்கத்தில் ராம் சரன் Game changer என்ற படத்தில் நடித்து வருகிறார். இது சங்கரின் தெலுங்கு அறிமுகமாகும். இப்படத்தில் ராம் சரண் ஒரு கலெக்டராக நடித்து வருகிறார் என்ற செய்திகள் வெளியாகின. மேலும் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

Game changer படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராம் சரணின் அடுத்த படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. RC16 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஸன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. இதனையடுத்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற  செய்திகள் வெளியாகிவுள்ளது. இது இவரின் இரண்டாவது தெலுங்கு படம் ஆகும். ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:
நடிகர் விஜய்க்கு ஓட்டு போடமாட்டேன்..வைரலாகும் அரவிந்த் சாமி வீடியோ!
Janhvi Kapoor to join with Ram Charan.

இதனால் ராம் சரண் என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com