நடிகர் விஜய்க்கு ஓட்டு போடமாட்டேன்..வைரலாகும் அரவிந்த் சாமி வீடியோ!

''I will not vote for Vijay '' Actor  Aravindsamy old interview viral
''I will not vote for Vijay '' Actor Aravindsamy old interview viral

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், சமீபத்தில் அரசியலில் குதித்ததாக அறிவித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்றும் பெயர் சூட்டினார். இவரின் அரசியல் வருகையால் சினிமாவில் பல இழப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், தான் மாற்று அரசியலை முன்னெடுக்க போவதாக உறுதியளித்தார். இவருக்கு ஏராளமான திரைதுறையினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகர் அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், நான் ரஜினியின் ரசிகன், கமல், விஜய்யை எனக்கு பிடிக்கும் என்பதற்காக ஓட்டுபோடமாட்டேன். ஓட்டுப்போடவும் கூடாது, நான் ஓட்டு போட மாட்டேன். அவர்கள் சொல்லும் விஷயத்தில், இந்த சமுதாயத்தை எந்த அளவுக்கு முன்னேற்ற முடியும்? என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும்? அவர்களின் கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? என பல வகையிலும் அவர்களின் செயல்பாட்டை கணித்த பிறகே வாக்களிப்பேன்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் NIFTY,SENSEX என்றால் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
''I will not vote for Vijay '' Actor  Aravindsamy old interview viral

அவர்கள் நல்ல நடிகர்கள் அவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறேன் பலரை காப்பாற்றி இருக்கிறேன், அதே போல நிஜவாழ்க்கையிலும் பலரை காப்பாற்றுவேன் என்ற நல்ல எண்ணம் இருக்கலாம். ஆனால், அவர்களால் மாநிலத்தை ஆளக்கூடிய திறன் படைத்தவர்களா? அந்த அளவுக்கு அவர்களின் தகுதி உயர்ந்துவிட்டதா? அவர்கள் இதை செய்ய முடியுமா? என்பதை அவர்களின் அரசியல் நிலைப்பாடு மூலம் புரியவைக்க வேண்டும். அவர்களால் நல்லது செய்ய முடியாது என்று நான் சொல்லவில்லை அவர்களால் முடியும் என கூறியுள்ளார்.

இந்த கருத்தை பகிர்ந்த நெட்டிசன்கள் விஜய் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போட மாட்டேன் என அரவிந்த் சாமி கூறியதை சுட்டி காட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com