ஜப்பானியர்களால் தயாரிக்கப்பட்ட 'ராமாயணம் - The Legend Of Prince Rama' அனிமேஷன் திரைப்படம்!

Ramayana The Legend Of Prince Rama
Ramayana The Legend Of Prince Rama
Published on

இந்தியாவின் பெருங்காப்பியம் 'ராமாயணம்' பழங்காலத்தில் தெருக்கூத்து, நாடகம், இலக்கியம் வாயிலாக மக்களிடையே பரப்ப பட்டது. சினிமா வந்த பிறகு கருப்பு வெள்ளை காலம் முதல் இன்றைய டிஜிட்டல் காலம் வரை ராமாயணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ராமாயண கதையால் ஈர்க்கப்பட்ட ஜப்பானியர்கள் ராமாயண கதையை அனிமேஷன் படமாக எடுத்துள்ளார்கள். இப்படத்திற்கு 'ராமாயணம் - The Legend Of Prince Rama' என்று பெயரிட்டுள்ளார்கள். இந்தியாவில் எடுக்கப்படும் பல படங்கள் ஜப்பான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்து வெளியான முத்து, சென்ற ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா உட்பட சில தமிழ் படங்கள் ஜப்பான் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ராமாயணத்தால் ஈர்க்கப்பட ஜப்பானியர்கள் ராமாயணத்தை அனிமேஷன் படமாக உருவாக்கி உள்ளார்கள்.

யுகோ சாகோவா என்ற ஜப்பானியரின் சிந்தனையில் உருவான இந்த அனிமேஷன் படத்திற்கு 'கொய்ச்சி சசாச ' (ஜாப்பானியர்) மற்றும் ராம் மோகன் (இந்தியர்) இணைந்து வடிவம் தந்துள்ளார்கள். கீக் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் 450 ஓவிய கலைஞர்கள் இணைந்து ராமர், சீதா, லக்ஷ்மணன், ராவணன், அனுமன் என அனைத்து ராமாயண கதாபாத்திரங்களின் ஓவியங்களை ஒரு லட்சம் வரை கையால் வரைந்துள்ளார்கள். அயோத்தி, மிதிலை, ஆரண்ய காண்டம், இலங்கை என ராமாயண கதை நடந்த களங்களை பார்த்து, பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள் இந்த கலைஞர்கள்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: மத கஜ ராஜா - விஷால் 'மீண்டும் வந்திருக்கிறாரா? அல்லது மீண்டு வந்துருக்கிறாரா?'
Ramayana The Legend Of Prince Rama

இந்த அனிமேஷன் படத்தின் ஹிந்தி ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் இருபது லட்சம் பார்வையாளர்கள் வரை பார்த்துள்ளார்கள். நமது வால்மீகி ராமாயணத்தை படித்து, இன்ஸ்பயர் ஆகி இந்த ராமாயணத்தை உருவாக்கி இருக்கிறார்கள் ஜப்பானியர்கள். இந்த கதையில் கம்ப ராமாயணம் மற்றும் துளசிதாஸ ராமாயணத்தின் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ராமாயணத்தின் பெருமையும், ராம நாமத்தின் புகழும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதற்கு ஜப்பானிய பின் புலத்தில் உருவாகும் இந்த ராமாயணம் அனிமேஷன் படமே ஒரு சாட்சி. இப்படம் இம்மாதம் 25 அன்று தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்:
துபாய் கார் ரேஸ்: மூன்றாவது இடத்தை தட்டி தூக்கிய அஜித்!
Ramayana The Legend Of Prince Rama

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com