விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் எப்படிப்பட்ட கதை தெரியுமா? 'சிக்மா' படத்தின் ரகசியங்கள் இதோ!

லைகா தயாரிப்பில் சுந்தீப் கிஷன் நடிக்கும் ஆக்ஷன் - அட்வென்ச்சர் ஹைஸ்ட் த்ரில்லர்!
sigma movie
sigma movie source:district app
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது தந்தையைப் போல நடிகராகாமல், திரைக்குப் பின்னால் இருந்து கதையை இயக்கும் படைப்பாளியாகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவர் இயக்கும் முதல் திரைப்படத்திற்கு "சிக்மா" (Sigma) என்று பெயரிடப்பட்டுள்ளது. திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் பற்றிய முக்கிய தகவல்கள் இதோ:

​1. பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம்

ஜேசன் சஞ்சயின் அறிமுகப் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய நிறுவனத்தின் ஆதரவு கிடைத்திருப்பது படத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது.

​2. சுந்தீப் கிஷன் கதாநாயகன்

இப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் சுந்தீப் கிஷன் (Sundeep Kishan) முதன்மை நாயகனாக நடிக்கிறார். 'மானாகரணம்', 'கேப்டன் மில்லர்' போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய சுந்தீப் கிஷன், சஞ்சயின் வித்தியாசமான கதைக்களத்திற்காக இதில் இணைந்துள்ளார்.

​3. திரையரங்கக் கல்வி பின்னணி

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் (Toronto Film School) திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை அமைப்பில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மேலும் லண்டனில் சினிமா தொடர்பான சிறப்புப் பயிற்சிகளையும் பெற்று, முறையான சினிமா கற்றலுடன் களமிறங்கியுள்ளார்.

​4. ஆக்சன் மற்றும் த்ரில்லர் கதைக்களம்

"சிக்மா" என்ற தலைப்பும் படத்தின் போஸ்டரும் இது ஒரு ஸ்டைலிஷ் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன. நவீன கால ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலான விறுவிறுப்பான திரைக்கதையை சஞ்சய் உருவாக்கியுள்ளார்.

​5. தமனின் இசை மற்றும் தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் (S. Thaman) இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு என திரையுலகின் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.

சமீபத்திய " சிக்மா ' முன் வெளியீட்டு விழா நிகழ்வுகள்:

சமீபத்தில் நடைபெற்ற" சிக்மா " முன் வெளியீட்டு விழா ( pre release event ) திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்றது .. சேலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய், கதாநாயகன் சுந்திப் கிஷன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய ஜேசன் சஞ்சய்" சேலம் நகரம் எனக்கு பல இனிமையான நினைவுகளைக் கொடுத்துள்ளது.. என் முதல் படத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் " என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்..

sigma
sigmasource:india today

அவர் பேசிக் கொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாக மிகுதியால்"TVK" என்று முழக்கமிட்டனர்..அதனை மிகவும் பொறுமையாகவும் புன்னகையுடனும் எதிர் கொண்ட ஜேசன் சஞ்சய் 'தம்ஸ் அப் (Thumbs up " சைகை காட்டி ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது..

மேலும் படத்தின் முதல் பாடலான" சிக்மா ஸ்டைல் ":, ரசிகர்கள் மத்தியில் நல்வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் திரைப்படம் அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி வெளியீடாக உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது..

இந்த படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று செப்டம்பர் 8 சென்னையில் நடைபெற்றது... இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சந்தீப் கிஷன்" இது போன்ற படம் மிக அரிதாகவே நடக்கும்.. இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும்.. அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக இப்படத்தில் உழைத்திருக்கிறார்.." சிக்மா" மிக ஜாலியான ஜென்சி திரைப்படம்.. உங்கள் முதல் படத்தை நான் நல்லபடியாக செய்வேன் என்று என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சஞ்சய் க்கு நன்றி ... நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தைப் பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.. இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரொடக்சன்ஸ்.. படக்குழுவினர் அனைவரும் நேர்மையாக உழைத்துள்ளனர்.. நிச்சயம் உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்றார்..

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் " சிக்மா" ( sigma '. ) திரைப்படம் குறித்த கூடுதல் ஸ்வாரஸ்யமான தகவல்கள் இதோ..

கதைக்களம் மற்றும் வகை :

இளைஞர்களைக் கவரும் வகையில் ஒரு திரில்லர் மற்றும் அட்வென்ச்சர் ஹைஸ்ட் ( Heist / Action - Adventure) திரைப்படமாக உருவாகி வருகிறது.. ரொமாண்டிக் கதையைத் தவிர்க்கும் நோக்கில், ஒரு கேங் மற்றும் புதையல் தேடலைச் சுற்றியுள்ள சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்ட கதையை ஜேசன் சஞ்சய் தேர்ந்தெடுத்துள்ளார்..

நட்சத்திரப் பட்டாளம் :

இப்படத்தில் சந்தீப் கிஷன் ( Sundeep Kishan ) மற்றும் ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.. இவர்களுடன் ராஜூ சுந்தரம், சம்பத் ராஜ்,சிவபண்டிட் ,அன்பு தாசன் மற்றும் யோக் ஜாபி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு:

லைகா புரொடக்சன்ஸ் ( Lyca Productions ) தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் .S இசையமைக்கிறார்.. மேலும் தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K.L எடிட்டிங் பணிகளையும், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும் மேற்கொள்கின்றனர்.. ஸ்டண்ட் மாஸ்டர்களான வெங்கட் மற்றும் செல்வா விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

sigma movie
sigma moviesource:samakalika

இயக்குனர் கனவும் தூண்டுதலும் :

கனடாவில் பயின்ற சஞ்சய் " சிட்டி ஆஃப் காட் ' ( City of God ) என்ற பிரசேலியத் திரைப்படத்தைப் பார்த்த பிறகே இயக்குனர் ஆக வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.._தான் ஒரு இயக்குநராக ஆக வேண்டும் என்ற ஆசையில் 2022 ல் " புல் தி ட்ரிக்ர்" ( Pull the trigger ) என்ற குறும்படத்தை முதலில் இயக்கி பயிற்சி பெற்றதாக பகிர்ந்து உள்ளார்..

கதையைக் கேட்டவுடன் எந்த நிபந்தனையும் இன்றி முழு சுதந்திரம் கொடுத்து படத்தை இயக்க லைக்கா நிறுவனம் என்னை ஊக்குவித்தது":என ஜேசன் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார்..

படப்பிடிப்பு அனுபவம் :

சேலம் மற்றும் பிரம்மாண்டமான ஜவுளிக்கடை பார்க்கிங் தளங்களில் அமைக்கப்பட்ட செட்களில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன..

படப்பிடிப்பு தளங்கள் & பிரம்மாண்டம் :

சென்னை, சேலம்,தலகோனா (Thalakona) போன்ற இந்திய இடங்கள் மட்டும் அல்லாமல், தாய்லாந்து (Thailand) நாட்டின் பல அழகிய பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது..

​ஜேசன் சஞ்சய் விளம்பரப் பேச்சுகளைத் தவிர்த்து அமைதியாகவும் நிதானமாகவும் பேசி தனது படைப்பின் வழியே திறமையை வெளிப்படுத்த விரும்பும் இயல்பு கொண்டவர்..ஸ்டார் கிட் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது சொந்த உழைப்பாலும் சினிமா மீதான காதலாலும் இயக்குநராக உருவெடுத்துள்ள ஜேசன் சஞ்சயின் "சிக்மா" நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் தன் தனித்துவமான திறமையாலும் உழைப்பாலும் சினிமா உலகில் தனக்கென அடையாளத்தை உருவாக்கி, உண்மையான சிக்மா நாயகனாக மிளிர வாழ்த்துக்கள்!!

இதையும் படியுங்கள்:
நடிகர் அஜித் செய்த திருட்டு... வைரலாகும் சென்டிமென்ட் ரகசியம்!
sigma movie
logo
Kalki Online
kalkionline.com