

தமிழ் சினிமாவில் புதிதாக இயக்குனராக அறிமுகமாகும் , முன்னாள் நடிகர் மற்றும் இந்நாள் முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம், சிறிய இடைவேளைக்கு பின்னர் வெள்ளித்திரையில் வெளிவர உள்ளது. விஜயின் மகன் என்பதால் சஞ்சய் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அவரை நடிகராக பார்க்க விரும்பிய ரசிகர்கள் தற்போது இயக்குனராக அவரது திரைப்படம் எவ்வாறு இருக்கும்? என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.
முதல்வரின் மகன் என்ற அடையாளத்தையும், பெரிய நடிகரின் மகன் என்ற அங்கீகாரத்தையும் விரும்பாமல், தனக்கென்று ஒரு கூட்டத்தை தனது சுய முயற்சியின் மூலமாக உருவாக்க வேண்டும் என்று சஞ்சய் நினைக்கிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணல் இந்த கருத்துக்களை பிரதிபலிக்கிறது. பெரிய நடிகரின் மகன் என்றாலும் கூட சஞ்சய் வாய்ப்பு தேடும் பொழுது, தனது தந்தையின் அடையாளத்தை பயன்படுத்தி உடனடியாக வாய்ப்புகளை பெறாமல் நிதானமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
சஞ்சய் தன் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு பெரிய நடிகரை தனது முதல் திரைப்படத்தில் நடிக்க வைத்து, பெரிய அளவில் தனது அறிமுகத்தை வெளிப்படுத்த நினைக்காமல் , ஒரு வளரும் நடிகரை வைத்து தனது சுய திறமையின் மூலம் அந்த திரைப்படத்தை தனது முதல் அடையாள அட்டையாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார். நேர்காணல்களில் அவர் கடைபிடிக்கும் நிதானம், பொறுமை, தற்பெருமை இன்மை , சொந்த மாநிலத்தின் மீதான ஈர்ப்பு ஆகியவை ரசிகர்களை பாராட்ட வைத்துள்ளது.
ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஜேசன் சஞ்சய்யிடம், "மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என நினைக்கிறீர்கள்? முதலமைச்சர் மகனா? அல்லது சூப்பர்ஸ்டாரின் மகனா?அல்லது முதல் படத்தை இயக்கும் இயக்குநரா?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு வழக்கம் போல் தனது பாணியில் பதில் அளித்த ஜேசன் சஞ்சய் , " இது பற்றி நான் எப்போதும் யோசிக்கிறேன். எனது குடும்பத்தின் பாரம்பரியம் தற்போதைய அரசியல் மாற்றங்களுடன் சேர்ந்து என்றென்றும் தொடரும். மறுபுறம், திரையுலகில் எனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிப்பதற்காகவே நான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். சிக்மா’ படத்திற்குப் பின், படத்தின் வெற்றியும் அதன் மூலம் கிடைக்கும் அறிமுகமும் எனது சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள பெரிதும் உதவும்" என்று கூறியுள்ளார்.
அவர் மொத்தமாக தனது சுய திறமையை மட்டும் வைத்து முன்னேறுவேன் என்று கூறாமல், தன் குடும்பத்தினரின் உழைப்பை மதித்து, அதே நேரம் தன்னுடைய உழைப்பால் அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் நினைத்து பேசியது ரசிகர்களின் பாராட்டினை பெற்றுள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ மீது ஆரம்பம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்சன் மற்றும் திரில்லர் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும்
வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சிக்மா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.