

தமிழ் திரையுலகில் முன்னனி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் எடுக்க பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டு போட்டுக்கு கொண்டு காத்திருக்க, அவரோ அரசியலில் உள்ள ஆர்வத்தின் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முழுநேர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடைசியாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தின் ஆடியோ உரிமை 35 கோடிக்கும், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் திரையரங்கு உரிமை மொத்தமாக 115 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
இந்நிலையில் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது மகனுக்கு திரைத்துறையில் வழிவிட்டுள்ளார். நடிகர் விஜய்யை போன்றே அவரது மகன் ஜேசன் சஞ்சய்க்கும் திரைத்துறையில் நுழைய ஆசை இருந்தாலும் நடிகரா இல்லாமல் தாத்தாவை போல் இயக்குனராகவே விரும்பினார்.
ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் டைரக்ஷன் குறித்த கோர்ஸ் முடித்துள்ளார். இவரை ஹீரோவாக்க வேண்டுமென பலரும் முயற்சி செய்த நிலையிலும், டைரக்ஷனில் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக ஜேசன் சஞ்சய் படம் இயக்க வேண்டும் என்ற தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் தெலுங்கில் பிரபல ஹீரோவாக வலம் வரும் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படம், பணத்தை மையமாக வைத்து ஒரு பக்கா ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேசன் சஞ்சை தனது முதல் படத்திலேயே ஆக்ஷன் களத்தில் இறங்கியுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் ஷுட்டிங் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் புதிய அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு இன்று (அக்டோபர் 10-ம்தேதி) காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்புக் குழுவினர் தங்கள் சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.