

சிக்மா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஜேசன் சஞ்சய் , தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நுழைய உள்ளார், என்பது தான் கோலிவுட்டின் ஹாட் செய்தி. தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜய். இன்று அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறி தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்துள்ளார். அதே நேரம் தமிழ் சினிமாவில் அவருக்கான இடம் வெற்றிடமாக உள்ளது அந்த இடத்தை யார் நிரப்புவார்கள்? என்று கேள்வி உள்ளது.
விஜய் அரசியலில் இறங்கியவுடன் , அவரது மகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருந்தது. விஜயின் மகன் அவரது பாணியை பின்பற்றி தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக உயர்வார், என்று விஜயின் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் ஜேசன் முதலில் இயக்குனராக தன்னை நிரூபிக்க முயற்சி செய்தார். அதே நேரம் ரசிகர்கள் , தளபதி விஜய் மகனை நடிகனாக பார்க்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தனர்.
ஜேசன் சஞ்சய் நீண்டகால சினிமா தேடலுக்குப் பிறகு, தனது கதைக்கு ஏற்ப தயாரிப்பாளரை தேடி அலைந்தார். இறுதியாக அவருக்கு லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் இயக்குநர் வாய்ப்பினை வழங்கியது. அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட ஜேசன், சிக்மா திரைப்படத்தை இயக்கியிருந்தார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா , சம்பத் , ராஜூ சுந்தரம் ஆகியோர் நடிப்பில் அந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற மணி ஹேய்ஸ்ட் கதைகளை பின்பற்றி அதைக் கோலிவுட்டுக்கு தகுந்த மாதிரி ஜேசன் மாற்றியிருந்தார்.
நீண்ட காலமாக தள்ளிப்போன சிக்மா திரைப்படத்தின் வெளியீடு சமீபத்தில் வெளியானது. ஏராளமான எதிர்பார்ப்புகள் இந்த திரைப்படத்திற்கு இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படத்தின் வசூல் அமையவில்லை. கலவையான விமர்சனங்களை இந்த திரைப்படம் பெற்றிருந்தாலும், ஜேசன் மீதான எதிர்பார்ப்பு மட்டும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. இந்நிலையில் ஹீரோ அரிதாரம் பூச ஜேசன் சஞ்சய் தயாராகி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
சிக்மா திரைப்படம் வெளியாக முன்னரே ஜேசனை கதாநாயகனாக நடிக்க வைத்து திரைப்படம் எடுப்பதற்கு பலரும் ஆர்வமாக இருந்தனர். தற்போது அவரும் நடிப்பதற்கு மனப்பூர்வமாக தயாராகி விட்டதாக தெரிகிறது. ஜேசன் அறிமுகமாக உள்ள திரைப்படத்தை அவரது சித்தப்பா சஞ்சீவ் இயக்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சஞ்சீவ் நடிகர் விஜய்யின் சித்தி மகன் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இவர் நடிகர் விக்ராந்தின் சொந்த சகோதரரும் ஆவார்.
சஞ்சீவ் இதற்கு முன்னர் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார், சின்னத்திரையிலும் குறிப்பிட்ட தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார். சிக்மா திரைப்படத்தில் அசோசியேட் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். விஜய்க்கு மிகவும் நெருக்கமான இவர், விஜய் மகனுக்கும் நெருக்கமானவராக இருக்கிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க உள்ளது.
கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் திரைப்படம் உருவாக உள்ளது. சஞ்சீவ் இதற்கு முன்னர் தனது சகோதரர் விக்ராந்தை கதாநாயகனாக வைத்து 'தாக்கத் தாக்க' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எந்த வரவேற்பையும் பெறவில்லை.