வசூல் வேட்டையை அள்ளி குவிக்கும் ஜவான்.. ரூ.1000 கோடியை தாண்டியதால் அட்லீ குஷி!

ஜவான்
ஜவான்

யக்குநர் அட்லி இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி ஆகியோர் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்பெற்று சாதனைப்படைத்துள்ளது.

இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்த ஜான் தென்ந்திய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. ஆனால், இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தென்ந்திய மொழிகளில் ஏற்கனவே வெளியான படங்களில் தாக்கம் ஜவான் திரைப்படத்தில் இருப்பதன் காரணமாக இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்ந்திய மொழிகளில் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்ப்பார்பை நிவர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

jawan success meet
jawan success meet

அதேநேரம் உலகம் முழுவதும் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, முதல் நாளில் 129 கோடி, இரண்டாம் நாளில் 111 கோடி, மூன்றாம் நாளில் 144 கோடி என மூன்று நாட்களில் 384 கோடியை ஜவான் திரைப்படம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 19 நாட்களான இன்று வரை மொத்தம் 1004.92 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக அளவில் வசூலை பார்க்கும் போது வசூலில் மிக அதிவேகமாக 1000 கோடியை வசூல் செய்த பாலிவுட் திரைப்படம் என்ற பெயரை ஜவான் திரைப்படம் பெற்று இருக்கிறது. அதே போல உலக அளவில் அதிகம் வசூல் செய்த பாலிவுட் திரைப்படமாகவும் ஜவான் மாறியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com