Jayamravi and Arti
Jayamravi and Arti

ஜெயம்ரவி-ஆர்த்தியின் விவாகரத்து கிட்டத்தட்ட உறுதி – சினிமா பிரபலம்!

Published on

ஜெயம்ரவி ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து செய்யவுள்ளனர் என்று செய்திகள் பரவி வரும் நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து ஒரு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் சமீபக்காலமாக பிரபலங்களின் விவாகரத்து செய்திகள்தான் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் சில நாட்களாக ஜெயம்ரவி ஆர்த்தி குறித்தான விவாகரத்து செய்திகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இது முதலில் எங்கு ஆரம்பித்தது என்றால், ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜெயம்ரவியுடனான புகைப்படங்களை நீக்கினார். இதனால், விவாகரத்தாக இருக்குமோ என்று ரசிகர்கள் கணித்தனர். ஆனால், அவர் ஆர்த்தி ரவி என்ற பெயரை மாற்றவில்லை என்பதால், சரியாக கணிக்கமுடியாமல் இருந்தது.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல், குடும்பம் மட்டுமே என்று நிலையில் இருந்தவர் ஜெயம்ரவி. இருவரும் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிட்டு நல்ல கணவன் , மனைவி என்பதுபோல இருவரும் பதிவிட்டு வந்தனர். ஒரு பெஸ்ட் கப்புல் என்று ரசிகர்களால் போற்றப்படும் சமயத்தில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் வாக்குவாதமாக ஆரம்பித்த மனஸ்தாபம் இப்போது பெரும் சண்டையில் வந்து நிற்கிறது என்றும், கூடிய சீக்கிரமே இரண்டு பேரும் விவாகரத்து முடிவை அறிவிக்கவிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் பேசியதாவது, “நாங்கள் விசாரித்தவரைக்கும் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்திக்கும் இடையே சண்டை இருப்பது உண்மைதான் என்று சொல்கிறார்கள். விரைவில் இதுதொடர்பான ஆதாரப்பூர்வமான செய்திகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சனை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் மறுபக்கம் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. இரண்டு பேருக்கும் பிரச்சனை இருப்பதும், விவாகரத்து முடிவுக்கு வந்ததெல்லாம் உண்மைதான். இருவரும் சேர்ந்துவிட்டால் நல்லதுதான்.

இதையும் படியுங்கள்:
விரைவில் நட்சத்திரக் கலை விழா: ரஜினிகாந்துடன் நடிகர் சங்கத்தினர் ஆலோசனை!
Jayamravi and Arti

அதேபோல் இந்த விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணம் என்று சிலர் கிளப்பிவிடுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. கணவன், மனைவிக்குள் சண்டை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் பெண். அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. எதிர்காலம் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் இதில் தனுஷை இழுத்துவிடுவது சரியில்லை. இதெல்லாம் அவர் மீது தவறான இமேஜ் குத்துவதற்கு செய்கிறார்கள்". என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com