ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனர்களாக இல்லாமல் பலர் படம் தந்து வெற்றி பெறுகிறார்கள். இப்படி உதவி இயக்குனர்களாக இல்லாமல் இயக்குனராக முடியும் என சமகாலத்தில் நிரூபித்து காட்டியவர் கார்த்திக் சுப்புராஜ். மென் பொருள் வல்லுநரான கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்கள் எடுத்து சினிமாவாவை கற்றுக்கொண்டார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் இயக்கிய பீட்சா திரைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அதன் பின்பு இயக்கிய ஜிகர்தண்டா இளமை துள்ளளாக இருந்தது. இவரின் திறமையை பார்த்த ரஜினி பேட்ட படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல்வேறு படங்கள் எடுத்து வருகிறார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படம் தீபாவளியன்று வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. 2014-ம் ஆண்டு வெளியான அதிரடி நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படமான 'ஜிகர்தண்டா'வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் எப்போது ஒடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்தப் படம் டிசம்பர் 8ம் தேதி, நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com