
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 7ஆம் அறிவு படத்தில் வில்லனாக அசத்திய ஜான் ட்ரை நுயொனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் ஜோடியாக சேர்ந்து நடித்து 2011-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 7ஆம் அறிவு. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை நல்ல வலுசேர்த்தது.
இப்படத்தில் 'ஆபரேஷன் ரெட்' எனும் பயோ வாரை தொடுக்கும் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் டாங்க் லீ- யாக நடித்திருந்தவர் தான் ஜானி ட்ரை நுயொன். இவர் சீனாவை சேர்ந்த நடிகர் ஆவார். ஜாக்கி சான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சண்டைக்காட்சிகளில் நடித்த இவர் ஒரு வியட்நாமிய அமெரிக்க திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர், ஸ்டண்ட் டபுள் மற்றும் தற்காப்பு கலைஞர் ஆவார்.
இவர் vovinam & akido, Wushu, tai chi, taekwondo, போன்ற பல்வேறு கொடிய சண்டைக் கலைகளில் சிறந்தவர்.
தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படத்தில் நாயகன் சூர்யாவுக்கு இணையாக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் வில்லனாக நடித்த ஜானி ட்ரை நுயொன். 7ஆம் அறிவு படத்தில் இவர் செய்யும் ஆக்ஷன், தற்காப்பு கலை நோக்குவர்மம் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் அவரின் ஸ்டைலான சண்டைக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே சொல்லலாம்.
இப்படத்திற்கு பின் அதர்வா நடிப்பில் வெளிவந்த இரும்பு குதிரை படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அருண் விஜய் பாக்ஸர் திரைப்படத்தில் நடித்த போது அவருக்கு பயிற்சியாளராக ஜானி ட்ரை நுயொன் நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
7ஆம் அறிவு படம் வெளியாகி கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது அந்த படத்தில் வில்லனாக கலக்கிய, நடிகர் ஜானி ட்ரை நுயொனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், 7ஆம் அறிவு படத்தில் நடித்த நடிகரா இது? ஆளே மாறிவிட்டாரே என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி இவர் அவர்தானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் 7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் இவருக்கு அன்றைய காலத்தில் பெண் ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.