ஏ. ஆர். முருகதாஸுடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

Murugadoss
Murugadoss
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இயக்குனர் முருகதாஸும் X தளத்தில் தனது உற்சாகத்தைத் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் 2001ம் ஆண்டு அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் ரமணா, கஜினி, ஸ்டாலின், 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், தர்பார், ஸ்பைடர் போன்றத் தமிழ் படங்களை இயக்கினார். இதில் 2005ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படம், இவருக்குத் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாக ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. தெலுங்கில் ஸ்டாலின் என்றப் படத்தை இயக்கினார். கஜினி என்ற பெயரிலேயே ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கினார் முருகதாஸ்.  இந்தி கஜினி படத்தின் மூலம் அமீர்கானுடன் கைக்கோர்க்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பின்னர் முருகதாஸ் தெலுங்கில் இயக்கிய ஸ்டாலின் படத்தை பாலிவுட்டில் ஜெய் ஹோ என்ற ரீமேக் படமாக சோஹைல் கான் இயக்கினார். சல்மான் கான் நடித்த இப்படத்திற்கு முருகதாஸ் தான் திரைக்கதை எழுதினார். அதன்பின்னர் அக்ஷய் குமார் நடிப்பில் Holiday- A soldier is never off duty என்ற தமிழ் படம் துப்பாக்கியின் ரீமேக் படத்தை இயக்கினார். அதேபோல் அகிரா என்ற ஹிந்திப் படத்தையும் இவர் இயக்கினார். இதுவும் மௌன குரு என்றத் தமிழ் படத்தின் ரீமேக்காகும்.

கடைசியாக முருகதாஸ் ரஜினி வைத்து தர்பார் என்றப் படத்தை இயக்கினார். மேலும் இவர் சிலப் படங்களுக்குக் கதை, திரைக்கதை மட்டும் எழுதியிருக்கிறார். அதேபோல் சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.

இதனையடுத்துத் தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மினி வசந்த் நடிப்பில் ஸ்ரீ லக்ஷ்மி மூவி தயாரிப்பில் ஒருப் படத்தை இயக்கவுள்ளார் முருகதாஸ்.

அந்தவகையில்தான் தற்போது பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் ஏ. ஆர். முருகதாஸ் கைக்கோர்க்கவுள்ளார். இதற்கு முன்னர் சல்மான் கான் நடித்த ஜெய் ஹோ படத்திற்கு முருகதாஸ் திரைக்கதை மட்டுமே எழுதிக்கொடுத்தார். ஆகையால் இதுதான் இவர்கள் இணையும் முதற்படமாகும். இந்தப் படத்தை சாஜித் நடியத்வாலா தயாரிக்கவுள்ளார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் சீசனில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இரண்டு மலையாள இயக்குனர்கள் கோலிவுட்டில் அறிமுகம்!
Murugadoss

2016ம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் களமிறங்கப்போகிறார். இது அவருக்கு உற்சாகம் அளிப்பதாகவும், திரை அனுபவத்தைப் பெறுவதற்குத் தாயாரக இருங்கள் என்றும் X தளத்தில் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com