நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்த நிலையில், அங்கு ஒரு துறவியிடம் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைபடத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவித்து இருந்தது. இதற்காக துபாய் சென்ற ரஜனிகாந்த் அங்குள்ள இந்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. சுமார் 2 வார கால ஓய்வுக்கு பின் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், கடந்த மே 29ஆம் தேதி ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வார் என்று சொல்லப்பட்டது.
இதை தொடர்ந்து இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு இமயமலை அடிவாரத்தில் நின்றபாடு எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகிறது. வெள்ளை நிற வேஷ்டி சட்டை அணிந்து, ஷால் ஒன்றைபோற்றியபடி ... கூலிங் கிளாஸ் அணிந்து செம்ம கூலாக தலைவர் போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு துறவியிடம் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வேட்டையன் திரைப்படம் குறித்து பேசும்பொழுது அந்த திரைப்படம் தசரா பண்டிகையன்று வெளியாக உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகின்றார். ஆகவே வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல கூலி திரைப்படம் குறித்து அவர் கேட்ட பொழுது ஜூன் மாதம் பத்தாம் தேதி முதல் பட பணிகளை தான் துவங்க உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகின்றார். எனவே தனது இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பி அவர் அப்பாடப் பணிகளை ஜூன் 10ஆம் தேதி முதல் துவங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.