Pan India படமாக உருவாகும் ஜூனியர் என்.டி.ஆர் புதிய படம்!

Devara Movie
Devara Movieassets-in.bmscdn.com
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘தேவரா’ படத்தின் டீசர் அப்டேட் பற்றிய தகவல் வெளியாகிவுள்ளது.

தெலுங்கில் கொரட்டாலா ஷிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தேவரா படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்தது. இப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை அதற்கான எந்த ப்ரோமோஷன் வேலைகளையும் படக்குழு ஆரம்பிக்கவில்லை.

அதேபோல் எந்த அப்டேட்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனையடுத்து தேவரா படக்குழு டிசம்பர் 20 தேதிகளில் டீசர் வெளியிட்டு, அதன்மூலம் படத்திற்கான ப்ரோமோஷன்களை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி ஷாருக்கானின் Dunki படமும் டிசம்பர் 22ம் தேதி பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் படமும் வெளியாகவுள்ளன. இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்கள் வெளியாகவுள்ளன. இந்த நிலையில் தேவரா படக்குழு இரண்டு படங்களின் இடைவெளியில் டீசர் திரையிடப்பட்டு ப்ரோமாஷன் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் தேவரா படத்திற்கு ரசிகர்களின் ஹைப் கூடும் என்பதே அவர்களின் திட்டம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தில் VFX வேலை வெகு நாட்களாக நடைப்பெற்றுவருகிறது. படத்தில் சண்டைக் காட்சிகள் தனித்துவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவரா படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தை கொசராஜு ஹரி கிருஷ்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குனர் கொரட்டால ஷிவா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணையும் இரண்டாவது படம் இது. இவர்கள் இணைந்து உருவாக்கி 2016ம் ஆண்டு வெளியான படம்தான் ஜனதா காரேஜ். இப்படத்தில் மோகன்லால், சமந்தா, நித்யா மேனன், தேவையானி ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் மட்டுமே 135 கோடி வசூல் செய்தது.

இதனால் ஷிவா மற்றும் என்.டி.ஆர் இணைந்த இரண்டாவது படத்திற்கும் தெலுங்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மேலும் RRR படத்தின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர் இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்ததால் தேவரா படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது என்றே கூற வேண்டும். இன்னும் சொல்லபோனால் ‘ நாட்டு, நாட்டு ‘ பாடலின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் உலகளவில் பிரபலம் ஆனார்கள் என்றே கூற வேண்டும். இப்போது இந்த தேவரா படம் X தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com