
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதை வகுத்து அதில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். அஜித்குமாரைப் பொறுத்தவரையில், சினிமாவில் உள்ள மற்ற பிரபலங்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானவர். இவர், சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் பழக்க வழக்கங்களை தாண்டி இப்படி தான் நான் இருப்பேன் என தனக்கென தனி பாதையை வகுத்து அந்த வழியில் பயணித்து ஜெயித்தும் வருகிறார்.
இவருக்கு சினிமாவை தாண்டி கார், பைக் ரேசில் ஆர்வம் அதிகம். இந்நிலையில் இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பின்னர் கார் ரேஸ்களில் அதிக கவனம் செலுத்துகிறார். அஜித்தை வைத்து படத்தை இயக்க, பல முன்னனி இயக்குனர்கள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்க, ஆனால் அவரோ தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் சாதித்து வருவதுடன் தற்போது புதிய படங்களில் ‘கமிட்' ஆகமாட்டேன் எனவும் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்ட இவரது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி ஒருமுறை முதலிடத்தையும், இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒரு முறை இரண்டாவது இடத்தையும், அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற கார் ரேசில் 3-வது இடத்தையும் பிடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அஜித், Indian Film Industry என்ற லோகோவை தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் பொறித்து சர்வதேச தேச அளவில் இந்திய திரையுலகின் புகழை கொண்டு சென்றுள்ளார். இதனை பாராட்டி தமிழக அரசு தரப்பிலிருந்து அஜித்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஜித் கார் ரேசில் கலந்து கொள்வதற்காக பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே அதிகம் தங்கியுள்ளார். இந்நிலையில் அஜித்தை பார்க்க சென்ற அவரது ரசிகர்கள் அவரை பார்த்ததும் அவரை பார்த்து ஆரவாரம் செய்தனர். இதை கவனித்த அஜித் முதலில் கையசைத்து ரசிகர்களை பார்த்து சிரித்தார். உடனே குஷியான ரசிகர்கள் இன்னும் அதிக சத்தமாக விசில் அடித்தவுடன் டென்ஷனான அஜித் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு கைகளால் கூடாது என்பது போல் சைகை செய்தார். இதை கவனித்த ரசிகர்கள் உடனடியாக விசில் அடிப்பதையும், கத்துவதையும் நிறுத்தி விட்டு அமைதியானர்.
ரசிகர்களை பார்த்தும் புன்னகைக்கும் அஜித், பின்னர் அதே ரசிகர்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் சத்தம் எழுப்பிய போது தனது ஒரே சைகையால் அனைவரையும் ஒரு நொடியில் கன்ட்ரோல் செய்தது அஜித்தால் மட்டுமே முடியும் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.