ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக நடிகர் சூர்யா!

ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக நடிகர் சூர்யா!

ஆஸ்கார் அகாடமியில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாக சேருமாறு நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் அகாடமியின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாகச் சேருமாறு உலகம் முழுவதும் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சார்பாக  தமிழின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் நபர் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com