Kalki 2898 AD Movie Review
Kalki 2898 AD Movie Review

விமர்சனம்: ‘கல்கி 2898 AD’ - உயிர் இல்லாத ஓவியம்!

ரேட்டிங்(2.5 / 5)

பெரிய அளவில் பில்ட் அப்  பண்ணாங்களே, அப்படி என்னதான் இந்த ‘கல்கி 2898 AD’ படத்தில் இருக்கு என்கிற ஆர்வத்தில் படம் பார்க்கப் போனோம். படம் ஆரம்பிச்ச மூணாவது சீனிலேயே இது வெறும் பில்ட் அப் மட்டுமே என்கிற விஷயம் புரிஞ்சது. என்ன செய்ய டிக்கெட் கவுண்டர்ல பணத்தை திரும்பத் தர மாட்டாங்களே? வேற வழியில்லாமல் இந்தப் படத்தை பார்க்க ஆரம்பிச்சோம். நாக் அஸ்வின் இந்தப் படத்தை டைரக்ட் பண்ணியிருக்காரு.

மகாபாரத போர் முடிச்சதும் அஸ்வத்தாமனுக்கு  கிருஷ்ண பரமாத்மா, ‘உனக்கு சாவே கிடையாது’ என்கிற வரத்தை தருகிறார். கட் பண்ணா 2898ம் ஆண்டு ஒரு பெரிய மனுஷன் வாரணாசியில் இருக்கற மக்களை சிறைப்படுத்தி அட்டகாசம்  பண்றாரு. கர்ப்பமா இருக்கற பெண்களை பரிசோதனை என்கிற பெயரில் சாகடிக்கிறாரு.

ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சு வேற ஊருக்கு போறா. அங்கேயும் வில்லனோட ஆட்கள் வந்து பிரச்னை பண்றாங்க. அஸ்வத்தாமா வந்து காப்பாத்தறாரு. இருந்தாலும் கர்ப்பமான பெண் கடத்தப்படுறாங்க. அதோட, அடுத்த பார்ட்டுக்கு லீட் வருது. தப்பிச்சோம்டா சாமின்னு நாம வெளில வர்றோம்.

இந்த மாதிரி அனிமேஷன் படமெல்லாம் குழந்தைகள் விரும்பி பார்ப்பாங்க. ஆனா, இந்த ‘கல்கி’ படத்தை பார்க்க வந்த  குழந்தைகள் பலர் பாதியிலே ஐஸ் க்ரீம் வாங்க போனதை பார்க்க முடிஞ்சது. இந்தப் படத்திலேயே ஓரளவு நல்லா நடிச்சது பிக் பி  அமிதாப்தான். வயசான அஸ்வத்தாமனாக நல்லா பண்ணியிருந்தாரு. பிரபாஸ் வராரு, போறாரு, சண்டை போடுறாரு. அவ்வளவுதான். நம்ம யோகி பாபுவோட காத்து ஆந்திரா பக்கமும் அடிச்சிருச்சு போல. படத்துல நடிக்கிற பிரம்மானந்தம் மருந்துக்குக் கூட சிரிக்க  வைக்க ட்ரை பண்ணலை. மொட்டை தலையோட வர்றாரு நம்ம கமல் சார். இவரோட கெட்டப்பை ஒரு பக்கம் பார்க்கும்போது இது கமலஹாசனா? அல்லது மொட்டை ராஜேந்திரனா? என யோசிக்க வைக்குது.

இதையும் படியுங்கள்:
கம் பேக் 'முத்தழகு' - கொட்டேஷன் கேங்!
Kalki 2898 AD Movie Review

800 வருஷத்துக்கு அப்புறம் நடக்கும் கதையில் என்ன மாதிரி செட்டிங் இருக்கணும்? இந்தப் படத்தில் வரும் இடங்களைப் பார்த்தா ஏதோ பழைய காயலான் கடைக்கு வந்த மாதிரி இருக்கு. பிரவீன் கிளாரோவின் சிறப்பு எபெக்ட் ஏதோ நல்லா இருக்கு. சந்தோஷ் நாராயணின் இசையில் பாட்டின் வரிகள் கேட்கவே இல்லை. ‘நானே வரேன்’ என்று படம் முடியும்போது கமல் சார் அடுத்த பார்ட்க்கு லீட் தராரு. (ஆண்டவரே, இந்தியன் 3, தக் லைப்ன்னு போய்டுங்க, மறுபடியும் இந்த மனவாடுகள் கிட்ட மாட்டிக்காதீங்க, உங்களை வெச்சு செஞ்சுருவாங்க போல தெரியுது) கல்கி படத்தோட இரண்டாம் பாகம் வராம இருந்தா தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ரொம்ப நல்லது. திரையில் இந்த கல்கி, அவதாரம் எடுத்திருக்கவே வேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com