கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடா? இணையத்தைக் கலக்கும் ஹேஷ்டேக்ஸ்!

Kalki movie
Kalki movie

கல்கி 2898 AD படத்தின் வெளியீட்டுத் தேதி சமீபக்காலமாக பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அந்தவகையில் தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதிசெய்துள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும்தான் மீதமிருக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன. இதனையடுத்து கல்கி 2898 AD ஹேஷ்டேகும், பிரபாஸ் ஹேஷ்டேகும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இது சூப்பர் ஹீரோ படமாக அதிக பட்ஜட்டில் உருவாகி வருகிறது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கலியுகத்தில் கிருஷ்ணன் அவதாரத்தைத் தழுவியும் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இப்படம் இந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில்தான் படத்தின் பாடல் காட்சிகளும் விட்டுப்போன சில காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. இந்தப் படப்பிடிப்பிற்காகப் படக்குழு இத்தாலி சென்று வந்தது. படப்பிடிப்பு ஒருபக்கமும் மறுபக்கம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்தன. எனெனும், மார்ச் தொடக்கம் வரை படப்பிடிப்பு முடியாததால் எப்படி மே 9ம் தேதி படம் வெளியாகும்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஆயினும், அப்போது படக்குழு வெளியீட்டுத் தேதி பற்றி எதுவும் கூறவில்லை.

ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் மே 13ம் தேதி நடைபெறவுள்ளதால் சமீபத்தில் கல்கி படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படவுள்ளதாகப் பேசப்பட்டது. சில நாட்களாக இதுப்பற்றி படக்குழு ஆலோசித்து வந்தது. அந்தவகையில் தற்போது கல்கி படத்தை தேர்தல் முடிந்தவுடன் மே 30ம் தேதி திரையிடலாம் என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய சினிமாவில் களமிறங்கும் Hollywood இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர்!
Kalki movie

இன்னும் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றே பாக்கி. 600 கோடி பட்ஜட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை Netflix ஓடிடி தளம் 175 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பார்த்தால் விமர்சன ரீதியாக படம் எப்படியிருந்தாலும், வசூல் ரீதியாக போட்ட பணத்தை எடுத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து ஒரே நேரத்தில் X தளத்தில் பிரபாஸ் மற்றும் கல்கி 2989AD ஆகியவை ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com