தீபிகா படுகோணின் பிறந்தநாளையொட்டி கல்கி படத்தின் போஸ்டர் வெளியானது!

Deepika Padukon
Deepika Padukon
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் பிறந்தநாளையொட்டி அவரின் படத்துடன் கூடிய ஒரு போஸ்டரை கல்கி 2898 AD படக்குழு வெளியிட்டிருக்கிறது.

தெலுங்கு சினிமா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ‘புஷ்பா 2’, ‘தேவரா’ மற்றும் ‘கல்கி’ ஆகிய படங்கள் வரிசையாக வெளிவர காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மகேஷ் பாபுபின் ‘குண்டூர் காரம்’, தேஜா சாஜா நடித்த ‘ஹனுமன்’, ரவி தேஜா நடிப்பில் ‘ஈகில்’ மற்றும் நாகார்ஜுனாவின் ‘நா சாமி ரங்கா’ போன்ற பிரபல ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாகவுள்ளன.

இந்தவகையில் அறிவியல் ரீதியான ஒரு படம்தான் கல்கி 2898 AD . இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோண், அமிதாப் பச்சன், கமலஹாசன், திஷா பத்தானி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார்.

KALKI MOVIE
KALKI MOVIE

இவர் இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை படமாக்கிய அஸ்வினின் ‘மகாநதி’ படம் தேசிய விருதை வாங்கி உள்ளது. இவரின் நான்காவது படம்தான் கல்கி. இப்படத்தின் அறிவிப்பு வெளியான முதலே ஒவ்வொரு அப்டேட்டிற்கும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகிறார்கள். ஏனெனில் தமிழ் நடிகர் கமலஹாசன், தெலுங்கு நடிகர் பிரபாஸ், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோண் என முன்னணி நடிகர்கள் நடிப்பது ஒரு முக்கிய காரணம். இது ஒரு அறிவியல் ரீதியான காவிய படமாகும்.

இப்படத்தில் கல்கி கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தீபிகாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்த போஸ்டரில் தீபிகாவின் பார்வை அனல் போல் கோபத்துடன் இருக்கிறது.

மேலும் ஒரு பெண் நடந்து போவது போல் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சென்ற ஆண்டு ஜுலை மாதம் வெளியான வீடியோ க்ளிம்ஸில் ஒரு ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படம் போல் இருந்தது. இந்நிலையில் தீபிகாவின் போஸ்டர் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் ட்ரீட்டாகவே உள்ளது. இதனையடுத்து கல்கி2898AD என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டாகியும் வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com