Kalvan movie review in tamil
Kalvan movie review in tamil

கள்வன் திரைப்பட விமர்சனம்: பாரதிராஜாவின் நடிப்பும் கொங்கு கலாசாரமும்!

கொங்கு மொழியின் கலவையும், காமெடி குறைவும் - 'கள்வன்' திரைப்பட விமர்சனம்.
ரேட்டிங்(3 / 5)

‘ஏனுங்க, என்ற வூட்ல, வைக்கோணும், செய்யோணும்’ என கொங்கு வட்டார வழக்கு பேச்சுமொழிகளை ஒரு திரைப்படத்தில் வைத்துவிட்டாலே போதும், கொங்கு கலாசாரத்தை சொல்லி விடலாம் என்று, ‘கள்வன்’ பட டைரக்டர் PV ஷங்கர் நினைத்துவிட்டார் போல. ‘கள்வன்’ படத்தில் நடிக்கும் நடிகர்களில் சிலர் மட்டுமே கொங்கு தமிழை சரியாகப் பயன்படுத்துகிறார்கள். பலர் கொங்கு தமிழை பேசுகிறார்கள் அவ்வளவே. ‘கள்வன்’ படத்தை டில்லி பாபு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா போன்றோர் நடித்துள்ளார்கள்.

கள்வன் - மாறுபட்ட களம் - மாறுபட்ட கதை - ரேட்டிங் 3/5 PV ஷங்கர் இயக்கத்தில் ஜி. வி பிரகாஷ், இவானா நடித்து வெளிவரவுள்ள படம் கள்வன். சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு வாலிபன் வாழ்க்கையில் காத லும் அரவணைப்பும் கிடைத்தால் ஏற்படும் மாற்றம் தான் கள்வன். சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தில் யானை மிதித்து சிலர் இறக்கிறார்கள் இதை சுற்றி இந்த கதை நகர்கிறது. படத்தின் முதல் பாதி பெரிய அளவில் ட்விஸ்ட் இல்லாமல் நகர்கிறது. இரண்டாவது பாதி சில திருப்பங்கள் நன்றாகவே அமைந்துள்ளது. ஜி. வி பிரகாஷ் தாடியுடன் பல படங்களில் நடித்தது போலவே நடித்துள்ளார். இவானா லவ் டுடே படத்திற்கு பிறகு நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்.அழும் போதும் காதல் வயப்படும் போதும் நடிப்பின் பல பரிணாமங்களை காட்டுகிறார். பாரதிராஜா முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் இமயம் நடிப்பு இமயம் ஆகி விட்டார் டைரக்டரே ஒளிப்பதிவும் செய்து விட்டார். கொங்கு மண்டலத்தின் அழகையும், கம்பீரத்தையும் செவ்வனே காட்டியுள்ளார். ஜி. வி பிரகாஷ் பாடல்களின் இசையை விட ரெவா வின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. கதையில் இன்னும் ஆழமாகவும், திரைக்கதையில் நேர்த்தியும் இருந்திருந்தால் இந்த கள்வனை பலருக்கு பிடிக்க வாய்ப்புள்ளது.

கதை ஓகே. லொகேஷன் ஓகே. ஆர்ட்டிஸ்ட் ஒகே. ஆனால், திரைக்கதை நாட் ஓகே. நிறைய ட்விஸ்ட்களும் நகைச்சுவையும் இருக்க வேண்டிய திரைக்கதையில் இது இரண்டும் இல்லாதது ஒரு குறையே.

படத்தின் மிகப்பெரிய பலமே பாரதிராஜா மற்றும் இவானாவின் நடிப்புதான். அன்பு, பாசத்திற்காக ஏங்கும்போதும், தனது கடந்தகால வாழ்க்கையைச் சொல்லும்போதும், ‘இயக்குநர் இமயம்’ நடிப்பின் இமயமாகி விடுகிறார். அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் ஒரு காட்சியே போதும், பாரதிராஜா எப்படி இத்தனை நடிகர்களை உருவாக்கினார் என்பதைப் புரிந்து கொள்ள.

இதையும் படியுங்கள்:
வனிதாவின் மகன் ஸ்ரீஹரி சினிமாவில் என்ட்ரியா?
Kalvan movie review in tamil

நம்ம வீட்டு பொண்ணுங்க, ஒரு பையனை லவ் பண்ணா எப்படி பேசுவாங்களோ, எப்படி கோபப்படுவாங்களோ அப்படியே இருக்கிறார் இவானா. ‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு இவானா தனது நடிப்பை கள்வனில் காட்டியுள்ளார். இன்னும் ஜி.வி.பிரகாஷ் எத்தனை நாளைக்குத்தான் பொறுப்பில்லாத பையனாகவே நடிக்கப் போகிறாரோ. (கொஞ்சம் கெட் அப்பை மாத்துங்க தம்பி)

திருடனை லவ் பண்றது, ரவுடியை லவ் பண்றது போன்ற விஷயங்களை கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமா டைரக்டர்கள் மறந்து இருந்தார்கள். PV ஷங்கர் மீண்டும் இதை கள்வனில் நினைவு படுத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இயக்குநரே இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலை, கிராமம், யானை என பல விஷயங்கள் ஒளிப்பதிவில் நன்றாகவே உள்ளன. ரெவாவின் பின்னணி இசையும், Nk ராகுலின் அழகியலாக உள்ளது. திரைக்கதை நேர்த்தியாக இருந்திருந்தால் இந்தக் ‘கள்வன்’ எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்திருப்பான் என்பது நிச்சயம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com